கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை துணை தலைவர் வழக்கறிஞர் வினீத், அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.


கோவை:

அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல்கள் மற்றும் தலைமைத்துவ மோதல்கள் காரணமாக கட்சித் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வரும் சூழலில், கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை துணை தலைவராக இருந்த வழக்கறிஞர் விணீத் தனது கட்சிப் பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளார்.

அண்மையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்பினருக்கிடையேயான மோதல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, எஸ்பி வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகளின் கட்சிப் பதவிகள் நீக்கப்பட்டன.

இதையடுத்து, தனது விலகல் குறித்து அறிக்கை வெளியிட்டிருந்த கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை துணை தலைவர் வழக்கறிஞர் வினீத், அரசியல் இயக்கங்களில் கருத்து வேறுபாடுகள் இயல்பானவை என்றாலும், கட்சிக்குள் தொடர்ந்து நிலவி வந்த மனக்கசப்புகள் மற்றும் சில சம்பவங்கள் தன்னை மனரீதியாக பாதித்ததாக குறிப்பிட்டிருந்தார்.

மேலும், கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தி அமைதியாக செயல்பட முயன்றபோதும், தற்போதைய சூழலில் முழுமையான மனநிறைவுடனும் ஈடுபாட்டுடனும் தொடர்ந்து பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

நீண்ட ஆலோசனை மற்றும் மனப்போராட்டத்திற்குப் பிறகு, அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட துணை தலைவர் பொறுப்பிலிருந்தும் விலகுவதாக அறிவித்திருந்தார்.

இதனிடையே, தமிழக வெற்றிக்கழக அரசில் அமைச்சராக உள்ள செங்கோட்டையனை சந்தித்த அவர், தமிழக வெற்றிக்கழகத்தில் (தவெக) அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...