திருமணமானதை மறைத்து கர்ப்பமாக்கிய பெண்ணுக்கு மிரட்டல்: காவலர் கைது

கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதுடன், கட்டாய கருக்கலைப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்ததாக பில்லூர் காவல் நிலைய காவலர் ஒருவர் மகளிர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


கோவை:

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்த குப்புராஜின் மகன் உதயகுமார், பில்லூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார்.

இவர் பேரூர் அருகே வசிக்கும் 27 வயது இளம்பெண்ணுடன் காதல் உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. திருமணமாகாதவர் என நம்பவைத்து, ஆசை வார்த்தைகள் கூறி அந்த பெண்ணுடன் நெருங்கிப் பழகியுள்ளார். தொடர்ந்து இருவரும் அடிக்கடி சந்தித்து வந்த நிலையில், அந்த பெண் கர்ப்பமானதாக கூறப்படுகிறது.

கர்ப்பமான தகவல் தெரியவந்ததும், அந்த பெண்ணை வடவள்ளி மற்றும் அவிநாசி அருகேயுள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

பின்னர், காவலர் உதயகுமாருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பது தெரியவந்ததால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், தனது வாழ்க்கையை ஏமாற்றியதாக கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு, “இந்த விவகாரத்தை வெளியே சொன்னால், இருவரும் தனியாக இருக்கும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன்; கொலை செய்து விடுவேன்” என்று காவலர் மிரட்டியதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்ததும் உறுதி செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து பேரூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் காவலர் உதயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...