கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்கப்படாததால் சுகாதார சீர்கேடு நிலவுவதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.


Coimbatore: கோவை: கோவை சர்வதேச விமான நிலைய வளாகத்தில் நுழைவாயில் அருகே அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிட வளாகம் முறையாக பராமரிக்கப்படவில்லை என பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் உள்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், இரண்டு வெளிநாடுகளுக்கும் தினமும் சராசரியாக 31 முதல் 32 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். மேலும், பயணிகளை வழியனுப்பவும், வரவேற்று அழைத்து செல்லவும் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் விமான நிலையத்துக்கு வந்து செல்கின்றனர்.

இத்தகைய சூழலில், விமான நிலைய நுழைவாயில் அருகே அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் முறையாக பராமரிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ள விளக்குகள் செயல்படாததால், அது பயன்பாட்டில் உள்ளதா என்பதில் குழப்பம் நிலவுவதாக பயணிகள் தெரிவித்துள்ளனர். மேலும், சுடுநீர் மற்றும் குளிர்ந்த நீர் வசதியுடன் கூடிய நவீன குடிநீர் இயந்திரங்கள் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேபோல், நுழைவாயில் அருகே செயல்பட்டு வரும் கழிப்பிடங்களும் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. தினமும் நூற்றுக்கணக்கானோர் பயன்படுத்தும் நிலையில், மொத்தம் மூன்று கழிவறைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு கழிவறை மட்டுமே உள்ளதாகவும், சிறுநீர் கழிப்பதற்காக இரண்டு பேசின்கள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளதாகவும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.

பயணிகள் மட்டுமின்றி டாக்ஸி ஓட்டுநர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் இந்த கழிப்பிடங்களை பயன்படுத்தி வரும் நிலையில், உரிய பராமரிப்பு இல்லாததால் கடும் துர்நாற்றம் வீசுவதாகவும், சுகாதார சீர்கேடு காரணமாக நோய் தொற்று அபாயம் ஏற்படும் சூழல் நிலவுவதாகவும் அச்சம் தெரிவித்துள்ளனர்.

மேலும், விமான நிலையத்துடன் தொடர்பில்லாத பலரும் வெளிப்புற பகுதிகளில் இருந்து அருகிலுள்ள கேட் வழியாக வந்து கழிப்பிடத்தை பயன்படுத்துவதால், சுகாதார பிரச்சினை மேலும் மோசமடைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் கோவை விமான நிலையத்தில் அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார பராமரிப்பில் காணப்படும் குறைபாடுகள் பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், விமான நிலைய நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...