கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளிலும் தொடர் நீர்வரத்து காணப்படுகிறது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Coimbatore: கோவை மாவட்டம் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்து அதிகரித்து வருவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மே 3ஆம் தேதி நிலவரப்படி பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணை 120 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் நீர் வரத்தால் மே 3ஆம் தேதி நிலவரப்படி 63.9 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 137 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 368 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

பொள்ளாச்சியை அடுத்த பரம்பிக்குளம் அணை 72 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து தொடர்ந்து நீர் வரத்தால் மே 3ஆம் தேதி இன்றைய நிலவரப்படி 36.98 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 240 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 1070 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

வால்பாறையில் அமைந்துள்ள சோலையாறு அணை 160 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் நீர் வரத்தால் இன்று மே 3ஆம் தேதி நிலவரப்படி 10.26 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 60 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 5 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அமராவதி அணை 90 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து தொடர்ந்து நீர் வரத்தால் மே 3ஆம் தேதி இன்றைய நிலவரப்படி 20.08 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 13 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 50 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணை 60 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து தொடர்ந்து நீர் வரத்தால் மே 3ஆம் தேதி இன்றைய நிலவரப்படி 31.6 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 770 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 804 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...