கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை அனைத்து வாகனப் போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் அவிநாசி சாலையை பயன்படுத்த மாநகர காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.


Coimbatore: கோவை உப்பிலிப்பாளையம் முதல் சின்னியம்பாளையம் வரை நீண்டுள்ள ஜிடி உயர்மட்ட மேம்பாலத்தில் அதிவேக வாகன ஓட்டம் தொடர்பான புகார்களை தொடர்ந்து, AI கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால், இன்று மற்றும் நாளை இரவு நேரங்களில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.




கோவை ஜிடி உயர்மட்ட மேம்பாலத்தில் இளைஞர்கள் சிலர் அதிவேகமாக வாகனங்களை ஓட்டி விபத்தில் சிக்குவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இதனையடுத்து, முக்கிய மேம்பாலங்களை இரவு நேரங்களில் மூட போலீசார் முதலில் முடிவெடுத்தனர். ஆனால், முன்கூட்டியே மேம்பாலங்கள் பேரிகேடுகளால் அடைக்கப்பட்டதால் மாநகர் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளானதால், இந்த திட்டத்தை போலீசார் கைவிட்டனர்.




அதிவேகமாக பயணிக்கும் வாகனங்களை கண்காணித்து AI கேமராக்கள் மூலம் அபராதம் விதிக்கும் திட்டம் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்டது. சோதனை அடிப்படையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. தற்போது மீண்டும் கேமராக்கள் பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.




இந்நிலையில், இன்று (25ம் தேதி) மற்றும் நாளை (26ம் தேதி) ஆகிய இரு நாட்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெறவுள்ளதால், ஜிடி உயர்மட்ட மேம்பாலத்தில் இரவு 10 மணி முதل் காலை 6 மணி வரை அனைத்து வகையான வாகனப் போக்குவரத்துகளும் முற்றிலுமாக தடை செய்யப்படுகின்றன.




எனவே, இரண்டு நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டும் வாகன ஓட்டிகள் ஜிடி உயர்மட்ட மேம்பாலத்தை பயன்படுத்தாமல், மாற்று வழியாக அவிநாசி சாலையை பயன்படுத்துமாறு கோவை மாநகர காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இதனை கவனத்தில் கொண்டு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...