கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழுந்த கேள்விக்கு கலகலப்பாக பதிலளித்ததுடன், பணப்பட்டுவாடா குற்றச்சாட்டுகள், போக்குவரத்து வசதி குறைபாடு, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்தும் கருத்து தெரிவித்தார்.


கோவை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் மாநிலம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜிகலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.



தனது ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக அவர் காலை நேரமே வாக்குச்சாவடிக்கு வந்து, பொதுமக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது, “இன்று நீங்கள் அணிந்திருக்கும் உடை ஏதோ ஒரு அரசியல் குறியீட்டை உணர்த்துவது போல இருக்கிறதே?” என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சிரித்தபடியே பதிலளித்த அண்ணாமலை, “நான் கடந்த ஐந்து வருடமாக இதே டிரஸ் கோடைத்தான் பயன்படுத்தி வருகிறேன். இதில் புதிதாக எந்தக் குறியீடும் இல்லை” என நகைச்சுவையாக பதிலளித்தார்.

மேலும் அவர் கூறுகையில், “நான் எப்போதும் பிரவுன் பேண்ட், வெள்ளை சட்டை அணிந்து கொண்டுதான் வருவேன். காவல்துறையில் இருந்தபோது இருந்த பழக்கத்தினால்தான் இதனை தொடர்ந்து பயன்படுத்துகிறேன். என்னை எந்தப் பக்கமும் சேர்த்து விடாதீர்கள்” என்றார்.

தமிழகத்தில் காலை முதலே மக்கள் ஜனநாயகக் கடமையை சிறப்பாக ஆற்றி வருவதாகவும், யாரும் வீட்டில் இருந்து வாக்களிக்காமல் தவற விடக் கூடாது என்றும் அண்ணாமலை வலியுறுத்தினார். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், 84 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதே நேரத்தில், கடந்த இரண்டு முதல் மூன்று நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பணப்பட்டுவாடா, நகை வழங்குதல் போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். குறிப்பாக கோவை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் பணப்பட்டுவாடா நடப்பதாக கூறினார்.

சென்னையில் இருந்து தென் தமிழகத்திற்கு செல்லும் பேருந்து வசதிகள் குறைவாக உள்ளதாகவும், கோவையில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்து வசதிகளும் போதுமானதாக இல்லை என்று வாக்காளர்கள் குற்றம்சாட்டுவதாகவும் தெரிவித்தார். தேர்தல் ஆணையம் இதுகுறித்து மேலும் கவனம் செலுத்தி, அனைவரும் வாக்களிப்பதற்கான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தியிருக்கலாம் என்றார்.

மேலும், “சாதாரண மக்கள் ₹50,000-க்கு மேல் பணம் எடுத்துச் சென்றால் சிக்கிக் கொள்ள வேண்டிய நிலை உள்ளது. ஆனால் சில இடங்களில் தைரியமாக பணமும் அணிகலன்களும் வழங்கப்படுகின்றன. இது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்றும் அவர் கூறினார்.

கோவை தெற்கு தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் போராட்டம் நடத்தியதையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.

வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் (SIR) நேர்மையாக நடைபெற்றதாகவும், தேவையில்லாமல் வாக்காளர்கள் நீக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். இருப்பினும், தேர்தல் ஆணையம் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த தவறிவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

இறுதியாக, “இந்த தேர்தலில் ஜனநாயகம்தான் ஜெயிக்கும்; பணம் எப்போதும் ஜெயிக்காது. மக்கள் மனசாட்சிக்கு உட்பட்டு சரியாக வாக்களித்தால் நல்லவர்கள் வெற்றி பெறுவார்கள்” என்று அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி முதுநிலை மாணவிகளுக்கு ஒருங்கிணைப்பு விழா நடைபெற்றது

Coimbatore மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முதுநிலை மாணவிகளுக்கான ஒருங்கிணைப்பு விழா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் தொடர் மழையால் அமராவதி அணையின் நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 29.99...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு தென்மேற்கு பருவமழையால் அதிக நீர்வரத்து ஏற்பட்டுள...

கிணத்துக்கடவில் ஜூலை 23-24ல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் மனுக்கள் பெறுகிறார்

கிணத்துக்கடவு வட்டத்தில் ஜூலை 23-24 தேதிகளில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார்  தலைமையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்...

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...