கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூப் சேனல் நிறுவனருமான செந்தில்வேல் பிரச்சாரம் மேற்கொண்டு, திமுக அரசின் நலத்திட்டங்களை எடுத்துரைத்து வாக்கு சேகரித்தார்.


Coimbatore: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், வேட்பாளர்கள் தங்கள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, கிணத்துக்கடவு தொகுதியின் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயன் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.



அதற்கு முன்பாக, பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூப் சேனலின் நிறுவனருமான செந்தில்வேல், திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், “இந்தியாவிலேயே தமிழ்நாட்டை பல்வேறு துறைகளில் முன்னணி மாநிலமாக மாற்றியவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். பெண்களுக்காக இந்த ஆட்சியில் ஏராளமான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மகளிர் ஆரோக்கியத்தை பாதுகாக்க கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. மகளிர் உரிமைத்தொகை வழங்கி பெண்களின் பொருளாதார நிலை உயர்த்தப்பட்டுள்ளது,” என்றார்.



மேலும், “எதிர்க்கட்சிகளிடம் மக்களுக்காக செய்த சாதனைகள் எதுவும் இல்லாததால் அவதூறு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக - பாஜக கூட்டணியில் அனைத்து முடிவுகளையும் பாஜகவே எடுக்கிறது. தமிழ்நாட்டில் சாதி, மத அரசியலை கொண்டு வர முயற்சிக்கின்றனர்,” என குற்றம்சாட்டினார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...