வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்தார்.


Coimbatore: வால்பாறை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வால்பாறை மலைப்பகுதி, ஜெயிலை தோட்டங்கள், வால்பாறை நகர்ப்பகுதி, கோட்டூர், ஆனைமலை, அங்கலக்குறிச்சி, காளியாபுரம், ஆழியார் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்காக அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார்.

அதில், வால்பாறை படகு இல்லம் மற்றும் தாவரவியல் பூங்கா மறுசீரமைப்பு செய்து விரிவாக்கம் செய்யப்படும் என தெரிவித்தார். மேலும், பழைய மலைக்கள்ளன் திரைப்படத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நடித்தபோது பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ரோப்வே கார் கேபிள் திட்டம் புதிதாக அமைக்கப்படும் என்றார்.

ஆனைமலை புலிகள் காப்பக எல்லைகள் மறுஅளவீடு செய்து, தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் கீழ்மட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றும் கூறினார்.

இயற்கை சூழலை பாதிக்காத வகையில் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டம் அறிமுகப்படுத்தப்படும். வனத்துறை வசூலிக்கும் பல்முனை நுழைவு கட்டணம் அதிமுக ஆட்சி அமைந்ததும் ரத்து செய்யப்படும் என்றும் உறுதியளித்தார்.

ஆனைமலை ஆறு - நல்லாறு திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும். வால்பாறை பகுதியில் மாற்றுத்தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்படும். நர்சிங் கல்லூரி தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

கோட்டூர் பகுதியில் தென்னை சார்ந்த மதிப்புக் கூட்டிய பொருட்கள் தயாரிக்க விவசாயிகளுக்கு பயிற்சி மையம் அமைக்கப்படும். வால்பாறை மார்க்கெட் பகுதியில் பார்க்கிங் வசதியுடன் கூடிய நவீன அடுக்குமாடி கட்டமைப்புகள் உருவாக்கி நகர்ப்புற மேம்பாடு செய்யப்படும் என்றும் லட்சுமண சிங் தெரிவித்தார்.

முன்னதாக வால்பாறையில் அவருக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்ள வந்த முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி கூறுகையில், அதிமுக ஆட்சிக்காலத்தில் வால்பாறை சுற்றுலா வளர்ச்சிக்காக அறிவிக்கப்பட்ட படகு இல்லம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை திமுக ஆட்சிக்கு வந்த பின்புமுடக்கியது என்று குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப். 24-ல் நேரடி மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தனியார் இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள இளமறிவியல் இடங்களை நிரப்ப நேரடி மாணவர...

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...