மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் அவசரகால கடன் உதவி வழங்க பொதுத்துறை வங்கிகளுக்கு பரிந்துரைக்குமாறு மனு அளித்து கோரிக்கை விடுத்துள்ளனர். செயல்மூலதன உச்சவரம்பை 20 சதவீதம் உயர்த்தவும் கோரினர்.


Coimbatore: மூலப்பொருட்கள் விலை உயர்வால் தொழில் துறையினருக்கு மிகுந்த நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் பொதுத்துறை வங்கிகள் அவசரகால கடன் உதவி வழங்க அறிவுறுத்த வேண்டும் என, கோவையில் ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் நேரில் வலியுறுத்தியுள்ளனர்.



இந்திய தொழில் வர்த்தக சபை மற்றும் தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், ரிசர்வ் வங்கி அதிகாரிகளுடன் தொழில் துறையினர் கலந்தரையாடும் நிகழ்ச்சி கோவையில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற கோவை கம்ப்ரஸர் தொழில் நிறுவன உரிமையாளர்கள் சங்கத்தினர், ரிசர்வ் வங்கி அதிகாரிகளிட‌ம் கோரிக்கை மனு அளித்து பேசினர்.

இதுகுறித்து கோவை கம்ப்ரஸர் தொழில் நிறுவனங்கள் சங்கத்தின்(COCIA) தலைவர் ரவீந்திரன் கூறும் போது, மூலப் பொருட்கள் விலை உயர்வு காரணமாக உற்பத்தி துறை சார்ந்த தொழில் நிறுவனத்தினர் மிகக் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.

இத்தகைய சூழ்நிலையில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் சனிக்கிழமை திருப்பூரிலும் அதைத் தொடர்ந்து திங்கட்கிழமை கோவையிலும் தொழில் துறையினருடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அதிகாரிகளிடம் எங்கள் சங்கம் சார்பில் மனு அளித்து பேசினோம்.

மூலப் பொருட்கள் விலை உயர்வு காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடியை எதிர்கொள்ள தொழில்துறையினருக்கு அவசர கால கடன் உதவி திட்டத்தை அமல்படுத்த பொதுத்துறை வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி அறிவுறுத்த வேண்டும்.

அதேபோல கொரோனா நோய் தொற்று பரவல் காலத்தில் அமல்படுத்தப்பட்ட அவசரகால கடன் உதவி திட்டத்தை போல செயல் மூலதன(Working Capital)உச்சவரம்பை தற்காலிகமாக 20% உயர்த்த வேண்டும். தற்போது தொழில் துறையினர் பெற்றுள்ள கடன் உதவி திட்டங்கள் ஆண்டுதோறும் புதுப்பித்தல் என்ற நடைமுறை அமலில் உள்ள காரணத்தால் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. இதை கருத்தில் கொண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கும் நடைமுறை அமல்படுத்த வேண்டும்.

'என்பிஏ' என்று அறிவிக்கப்படும் நடைமுறை மூன்று மாதத்தில் இருந்து ஆறு மாதங்களாக நீட்டிக்க வேண்டும். ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு மாற்றம் செய்யும் போது வசூலிக்கப்படும் பிராசசிங் கட்டணம் முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் மனுவாக அளித்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...

LPF and Affiliated Unions Protest in Coimbatore Against Centre and State Governments’ Labour Policies

The Coimbatore District Labour Progressive Federation (LPF) Council and affiliated unions staged a protest near the Red...

EPFO Wage Ceiling Revision: Coimbatore Officials Explain Benefits for Formal Sector Employees

The Union Cabinet’s decision to raise the EPFO mandatory coverage wage ceiling from ₹15,000 to ₹25,000, effective Septem...

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 23, 2026 அன்று காலை 9 மணி ம...

கோவையில் கைவினைஞர் தனித்தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

2027 ஜூலை மாதம் DGT நடத்தும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக (Private Candidates) கலந்து கொள்ள விரும்புவோர்...