கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்பு படை, மகாராஷ்டிரா காவல்துறை மற்றும் தமிழக காவல்துறையினர் இணைந்து 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நடைபெற்றது.


Coimbatore: வரும் 23ம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொதுமக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி வாக்குப்பதிவு செய்யும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொடிஅணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.



எல்லை பாதுகாப்பு படையினர், மகாராஷ்டிரா மாநில காவல்துறையினர், பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் என 300க்கும் மேற்பட்டோர் இந்த அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.



பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கஸ்தூரிபாளையத்தில் தொடங்கிய இந்த அணிவகுப்பை ஏ.எஸ்.பி. செல்வி இன்பா மற்றும் பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் பொன்னுசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.



யுனைடெட் கல்லூரி மற்றும் ஏ.வி.பி. பள்ளி பேண்டு வாத்திய மாணவர்கள் இசையுடன் தொடங்கிய இந்த அணிவகுப்பு, ஐந்து முக்கு, அகிலா பேக்கரி, பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையம், பெரியநாயக்கன்பாளையம் ஜங்ஷன் வழியாகச் சென்று கே.ஆர். மருத்துவமனையில் நிறைவடைந்தது.



இந்த அணிவகுப்பில் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஷ் கண்ணன், தடாகம் காவல் நிலைய ஆய்வாளர் சித்ரா, பெரியநாயக்கன்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பழனியம்மாள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், எல்லை பாதுகாப்பு படையினர், மகாராஷ்டிரா மாநில காவல்துறையினர், பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....