மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்களின் விலை 10சதவீதம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கோவை குறு மற்றும் சிறு பவுண்டரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


Coimbatore: கோயம்புத்தூர் குறு மற்றும் சிறு பவுண்டரி அதிபர்கள் சங்கத்தின் (COSMAFAN) தலைவர் சிவசண்முககுமார் கூறும் போது,

சங்கத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் கோவையில் நடந்தது.

கடந்த 45 ஆண்டுகளாக கோவை மாவட்டத்தில் வார்ப்பட ( Foundry) தொழிலின் வளர்ச்சிக்காக காஸ்மாபேன் சங்கம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. சங்கத்தில் 400-க்கும் மேற்பட்ட குறு மற்றும் சிறு பவுண்டரிகள் உறுப்பினர்களாக உள்ளன. இத்தொழில் மூலம் நேரடியாக 2 லட்சம் தொழிலாளர்களும், மறைமுகமாக 5 லட்சம் தொழிலாளர்களும் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர்.

ஆண்டுதோறும் சுமார் 2,500 கோடி ரூபாய்க்கும் அதிகமான வர்த்தகம் நடைபெறுகிறது.

கடந்த சில மாதங்களாக பவுண்டரி தொழிலுக்குத் தேவையான அடிப்படை மூலப்பொருட்களின் விலை 20 சதவீதம் வரையிலும், இதர துணைப் பொருட்களின் (Allied Materials) விலை 20% முதல் 40சதவீதம் வரையிலும் கடுமையாக உயர்ந்துள்ளது. இந்தச் சீரற்ற விலை ஏற்றத்தினால் சிறு மற்றும் குறு பவுண்டரிகள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றன. தொழிலைத் தொடர்ந்து நடத்த முடியாத இக்கட்டான சூழல் நிலவுகிறது.

இந்த நெருக்கடியைச் சமாளிக்கும் விதமாக, பவுண்டரிகளில் உற்பத்தி செய்யப்படும் 'காஸ்டிங்' (Casting) பொருட்களின் விலையை, தற்போதுள்ள விலையிலிருந்து 10 சதவீதம் உயர்த்துவது எனச் சங்கம் ஒருமனதாக முடிவெடுத்துள்ளது. இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வருகிறது.

பவுண்டரி தொழிலைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மூலப்பொருட்கள் மற்றும் துணைப் பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசூர் மற்றும் மாணிக்கம்பாளையம் பவுண்டரி கிளஸ்டர்களில் அரசு சார்பில் 'மூலப்பொருள் வங்கி' (Raw Material Bank) அமைத்துத் தர வேண்டும். குறு பவுண்டரிகளுக்கான ஜிஎஸ்டி (GST) வரியை தற்போதைய 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் மூலம் மட்டுமே லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும், பவுண்டரி தொழிலையும் பாதுகாக்க முடியும்.

என்றார்.

Newsletter

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...