பொள்ளாச்சி: வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் இளைஞர் கைது

பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி அண்ணாமலை நகரில் டிக் டாப் என்று வந்து வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் மூன்று பவுன் தங்கச் செயின் பறித்த அரியலூர் மாவட்ட இளைஞர் சிசிடிவி பதிவுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். பறிக்கப்பட்ட நகை மீட்கப்பட்டுள்ளது.


Coimbatore: பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியில் டிக் டாப் என்ற போர்வையில் வீட்டிற்குள் நுழைந்து தனியாக இருந்த பெண்ணிடம் தங்கச் செயின் பறித்துச் சென்ற இளைஞர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டு நகை மீட்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி அண்ணாமலை நகர் பகுதியில் வசிப்பவர் கிருஷ்ணகுமார். இவரது மனைவி நிவேதா. கடந்த மாதம் 29ஆம் தேதி வீட்டில் நிவேதா தனியாக இருந்தபோது, ஒரு மர்ம நபர் டிக் டாப் என்று வீட்டிற்கு வந்தார். குடிக்க தண்ணீர் கேட்பது போல் நடித்த அந்த நபர், திடீரென நிவேதாவின் கழுத்தில் இருந்த மூன்று பவுன் தங்கச் செயினை பறித்துக்கொண்டு ஓடிவிட்டார்.



இதுகுறித்து நிவேதா கொடுத்த புகாரின் பேரில், கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கினர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், செயின் பறிப்பில் ஈடுபட்டவரை கண்டுபிடித்தனர். அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் சங்கர் என்பவர் இந்தக் குற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.



இதையடுத்து காவல்துறையினர் சங்கரை தேடி கைது செய்தனர். அவரிடம் இருந்து மூன்று பவுன் தங்கச் செயின் பறிமுதல் செய்யப்பட்டது. குற்றவாளி சங்கர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பொள்ளாச்சி கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவையில் பகுதி நேர வேலை தேடி சென்ற கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட வழக்கு; தவெகவினர் 3 பேர் கைது

கோவை பேரூர் அருகே வேலை தேடி உணவகத்திற்குச் சென்ற கல்லூரி மாணவரை, பார்சல் கட்டித் தர மறுத்ததாகக் கூறி தாக்கிய வழக்கில், த...

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...