கோவை-குவைத் இடையே நேரடி விமான சேவை ஏப்ரல் இறுதியில் தொடக்கம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து குவைத் நாட்டிற்கு Jazeera ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் ஏப்ரல் இறுதியில் நேரடி விமான சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. வாரத்தில் இரு தினங்கள் சேவை வழங்கப்படும். 15 நாட்கள் மட்டும் இச்சேவை செயல்படும் என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.


Coimbatore: கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து குவைத் நாட்டிற்கு நேரடி விமான சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தற்போது ஷார்ஜா, சிங்கப்பூர், அபுதாபி ஆகிய மூன்று வெளிநாடுகளுக்கு நேரடி விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக அபுதாபிக்கு மட்டும் விமான சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.





கோவை விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் மற்றும் ஷார்ஜாவிற்கு வழக்கம் போல் விமானங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோவையிலிருந்து குவைத் நாட்டிற்கு நேரடி விமான சேவை Jazeera என்ற ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் ஏப்ரல் மாதம் இறுதியில் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.





இதுகுறித்து கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, கோவையிலிருந்து குவைத் நாட்டிற்கு Jazeera ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் விமான சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. வாரத்தில் இரு தினங்கள் சேவை வழங்க வாய்ப்புள்ளது. தற்போது அந்த நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டுள்ள விமான சேவை நேரம் மாற்றி அமைக்க வேண்டி உள்ளது.





இந்த பணிகள் நிறைவடைந்த பின் அதிகாரப்பூர்வமாக கோவை-குவைத் இடையே விமான சேவை தொடங்குவது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும். இந்த விமான சேவை நிரந்தரமானது அல்ல. 15 நாட்கள் மட்டுமே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அனைத்து விவரங்களும் அதிகாரப்பூர்வமாக பின்னர் வெளியிடப்படும் என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...