சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை அறிவிப்புகளை தமிழ்நாடு சூரிய ஒளி மின் உற்பத்தியாளர்கள் சங்கம் உள்ளிட்ட தொழில்துறையினர் வரவேற்றுள்ளனர். நெட்வொர்க் கட்டணம் ரத்து மற்றும் மின் தேவைக்கு ஊக்குவிப்பு அளிக்கப்படும்.


Coimbatore: சூரிய சக்தி மற்றும் மின்சாரத்துறை தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை அறிவிப்புகளுக்கு தொழில்துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக மேற்கூரை சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு மானியம் வழங்கும் அறிவிப்பு தொழில்முனைவோர் மத்தியில் நல்வரவேற்பை பெற்றுள்ளது.



தமிழ்நாடு சூரிய ஒளி மின் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொருளாளர் சாஸ்தா ராஜா இதுகுறித்து கூறும்போது, "இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் மேற்கூரை சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு நெட்வொர்க் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை திட்டங்களுக்கு ஊக்கமளிக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து பல்வேறு மாநிலங்களில் நடவடிக்கை எடுத்து வரும் சூழலில், தமிழ்நாட்டில் நெட்வொர்க் கட்டணம் வசூலிக்கப்படுவது அபராதம் விதிப்பதற்கு சமமாக உள்ளது" என்றார்.


அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் மின்சாரத்துறை தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், அதிமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் குறிப்பிடத்தக்க அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. வீடுகளுக்கு மேற்கூரை சூரிய ஒளி மின்சார உற்பத்திக்கு சோலார் பேனல் அமைக்க ஒரு கிலோவாட்டிற்கு ரூபாய் 30,000 மற்றும் 2 கிலோவாட்டிற்கு ரூபாய் 60,000 மானியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், சூரிய சக்தி போன்ற மரபுசாரா எரிசக்தி உற்பத்திக்கு விரைந்து அனுமதி வழங்கப்படும் என்றும், அதன் மூலம் மின்சார உற்பத்தி அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. புனல் நீர், அனல் மின் நிலையம் போன்ற புதிய மின் உற்பத்தி நிலையங்களை தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


குறிப்பாக குறு, சிறு தொழில்துறையினருக்கு மின்சார வாரியத்தால் விதிக்கப்பட்ட நிலை கட்டணம் வரைமுறைப்படுத்தப்படும். தொழிலுக்கான கட்டண விகிதம் தொழில்முனைவோர் பாதிக்காத வகையில் மாற்றியமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள குறு, சிறு தொழிற்சாலைகளின் மின் தேவைகளுக்கு சூரிய ஒளி மின்சாரத்தை தாங்களே தயாரித்து பயன்படுத்துவதை ஊக்குவிக்க கூடுதலாக மானியம் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.


"மின்சாரத்துறை சார்ந்து முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கைகள் அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது" என்று தமிழ்நாடு சூரிய ஒளி மின் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொருளாளர் சாஸ்தா ராஜா தெரிவித்தார்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...