Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்ததை அடுத்து, கோவையில் தவெக மகளிர் அணியினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்து உடனடி கைது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.


Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj, தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பலரது கண்டனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் Vijay நேரடியாக DGP அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மகளிர் அணி சார்பிலும் புகார்கள் அளிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி கோவையிலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கட்சியின் கோவை தெற்கு மாவட்டம் மற்றும் புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. கோவை தெற்கு மாவட்ட செயலாளர் Vignesh புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் Rajkumar தலைமையில் மகளிர் அணியினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் Ponraj மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் மனு அளித்தனர்.


தமிழக வெற்றிக் கழகத்தின் பெண் நிர்வாகிகளை சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த Ponraj மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக வெற்றி கழகத்தின் கோவை தெற்கு மாவட்டம் மற்றும் புறநகர் வடக்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று புகார் அளிக்கப்பட்டது.


இது குறித்து பேட்டி அளித்த Vignesh தமிழக வெற்றி கழகத்திற்கு பெண்கள் ஆதரவு அதிகம் உள்ளதால் DMK வினரும் DMK வை சார்ந்தவர்களும் இதுபோன்று விமர்சனங்களை முன் வைப்பதாக குற்றம் சாட்டினார். இது போன்று பெண்கள் குறித்த ஆபாசமாக பேசுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் Ponraj ஐ உடனடியாக கைது செய்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...

2016 ஆனைமலை இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஆனைமலை காவல் நிலையத்தில் குற்ற எண் 369/2016-ன் கீழ் பதிவான கொலை வழக்கில், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாப்பான் @ சுதானந்தம...

ஜெம் வீரமணி வழக்கு: கோவை காவல் ஆணையர் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகா...

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...

கோவையில் பார் ஊழியரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

கோவை புலியகுளம் ரோடு பங்கஜாமில் ரோடு பகுதியில் உள்ள சன்ரிச் 11 - 11 பாரில் ஊழியர் பாண்டியராஜனிடம் இலவச மதுபானம் கேட்டு ம...

கோவை தடாகம் சாலையில் ஆம்புலன்ஸ் பணிமனையில் தீ விபத்து

கோவை தடாகம் சாலையில் உள்ள கோயில்மேடு அருகே ஆம்புலன்ஸ் பணிமனையில் திடீரென தீ பரவியது. இதனால் கரும்புகை மேகங்களாக சுற்றுவட...