தொழிலாளியை தாக்கி ஜாதி அவமதிப்பு: இருவருக்கு ஆயுள் தண்டனை

Coimbatore மலையாண்டிபட்டினம் பகுதியில் தேங்காய் உரிக்கும் தொழிலாளி பட்டீஸ்வரனை இரும்புக் கம்பியால் தாக்கி ஜாதி அவமதிப்பு செய்த இருவருக்கு சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. குற்றவாளிகளுக்கு தலா ரூ.3,000 அபராதமும் விதிக்கப்பட்டது.


Coimbatore: கோட்டூர் அருகே ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த தொழிலாளியை இரும்புக் கம்பியால் தாக்கி ஜாதி அவமதிப்பு செய்த வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை ஜாதி வன்கொடுமைகள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவை மாவட்டம், கோட்டூர் மலையாண்டிபட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் பட்டீஸ்வரன் (55). ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த இவர் தேங்காய் உரிக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 24.8.2019-ல் பட்டீஸ்வரன் வேலைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது, அதே பகுதியில் வசிக்கும் மாற்று ஜாதியைச் சேர்ந்த சந்திரகுமார் (34), முரளிதரன் (33) ஆகியோர் பட்டீஸ்வரன் வீட்டின் முன் நின்று கொண்டிருந்தனர்.

எனது வீட்டின் முன் ஏன் தேவையில்லாமல் நின்று கொண்டிருக்கிறீர்கள் என கேட்டதால், அவர்கள் இருவரும் பட்டீஸ்வரனுடன் தகராறில் ஈடுபட்டனர். அப்போது ஜாதிப் பெயரைச் சொல்லி இழிவாகப் பேசியதுடன், அவரை இரும்புக் கம்பியால் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த பட்டீஸ்வரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து கோட்டூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு கோவை ஜாதி வன்கொடுமைகள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை மார்ச் 25 அன்று விசாரித்த நீதிபதி K. விவேகானந்தன், குற்றஞ்சாட்டப்பட்ட சந்திரகுமார், முரளிதரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.3,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...