மேட்டுப்பாளையத்தில் தனியார் பேருந்து மோதி இருசக்கர வாகன ஓட்டுநர் காயம் - உதவாமல் சென்ற பேருந்து ஊழியர்கள்

மேட்டுப்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் தனியார் பேருந்து இருசக்கர வாகனத்தை மோதியதில் ஓட்டுநர் காலில் முறிவு. விபத்துக்குப் பின் உதவாமல் சென்ற பேருந்து ஊழியர்களின் செயல் சி.சி.டி.வி. காட்சிகளில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: மேட்டுப்பாளையத்தில் தனியார் பேருந்து ஒன்று இருசக்கர வாகனத்தை மோதி விபத்து ஏற்படுத்தியதில் வாகன ஓட்டுநர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேட்டுப்பாளையத்திலிருந்து கோவைக்கு தினசரி பல அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பாதையில் தனியார் பேருந்துகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்வதாக புகார்கள் எழுந்துள்ளன. அசுர வேகத்தில் செல்லும் இந்த பேருந்துகள் மற்ற வாகனங்களை பொருட்படுத்தாமல் ஓட்டப்படுவதாக கூறப்படுகிறது.

நேற்று இரவு மேட்டுப்பாளையத்திலிருந்து கோவைக்கு சென்ற 'தாமரை' என்ற தனியார் பேருந்து, ஹவுசிங் யூனிட் பகுதியில் முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தை முந்த முயன்றபோது மோதியது. இதில் இருசக்கர வாகன ஓட்டுநர் கீழே விழுந்தார். பேருந்தின் சக்கரம் அவரது வலது காலில் ஏறி இறங்கியதால் எலும்பு முறிவு ஏற்பட்டது.

விபத்தை ஏற்படுத்திய பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இருவரும் காயமடைந்தவரை பார்த்த பின்னர், மருத்துவமனைக்கு அனுப்பாமல் சாலையோரம் அமர வைத்துவிட்டு சென்றுவிட்டனர். பின்னர் அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். காயமடைந்தவர் முதலில் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கும், பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டார்.

இந்த சம்பவம் அருகில் இருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விபத்துக்குப் பின் உதவாமல் சென்ற பேருந்து ஊழியர்களின் செயல் கண்டனத்துக்குள்ளாகியுள்ளது. இது போன்ற விபத்துகளை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...