கோவையில் அனைத்து துறையினருக்கான டி-20 கிரிக்கெட் போட்டி: தினமலர் அணி சாம்பியன்

கோவையில் அனைத்து துறையினருக்கான டி-20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இறுதிப்போட்டியில் தினமலர் அணி, கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.


கோவை: கோவை மாநகர போலீஸ் மற்றும் 'ஸ்பார்க்கிளிங் ஈவென்ட்ஸ்' இணைந்து நடத்திய அனைத்து துறையினருக்கான டி-20 கிரிக்கெட் போட்டி கோவையில் நடைபெற்றது. இப்போட்டியில் தினமலர், தினகரன், இந்தியன் எக்ஸ்பிரஸ், மாநகர போலீஸ், மாவட்ட போலீஸ், விமானப்படை, மாநகராட்சி, கலெக்டர் அலுவலகம், வருமான வரித்துறை, 110 பட்டாலியன், வணிக வரித்துறை, மீடியா 11, கோவை பிரஸ் கிளப் உள்ளிட்ட 16 அணிகள் பங்கேற்றன.

அக்டோபர் 9 அன்று கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் தினமலர் அணி, கோவை மாநகர் போலீஸ் துணை கமிஷனர் அணியை எதிர்த்து விளையாடியது. டாஸ் வென்ற தினமலர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அணியின் துவக்க வீரர் விஜய் சிறப்பாக விளையாடி 60 ரன்கள் எடுத்து அரை சதம் அடித்தார். 20 ஓவர்களில் தினமலர் அணி 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது.

பதிலுக்கு ஆடிய துணை கமிஷனர் அணி 16 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் டி.எல்.எஸ். முறைப்படி தினமலர் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடிய தினமலர் அணியின் விஜய் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார்.

கோவை மாவட்ட போலீஸ் அணி மூன்றாம் இடத்தையும், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அணி நான்காம் இடத்தையும் பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப் பரிசு மற்றும் கோப்பைகளை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் மற்றும் துணை கமிஷனர் ஸ்டாலின் ஆகியோர் வழங்கினர்.

Newsletter

EPFO கட்டாய உறுப்பினர் ஊதிய வரம்பு ₹25,000 ஆக உயர்வு

EPFO-வில் கட்டாய உறுப்பினர் சேர்க்கைக்கான மாத ஊதிய உச்சவரம்பு ₹15,000-ல் இருந்து ₹25,000 ஆக செப்டம்பர் 17 முதல் உயர்த்தப...

Festive Season: Special Trains to Operate Between Chennai and Kollam via Coimbatore

Southern Railway will operate weekly special trains between Chennai and Kollam via Coimbatore, Salem and Erode from Octo...

Severe Traffic Congestion in Coimbatore’s Madukkarai Sparks Urgent Plea to Expedite Railway Overbridge Work

Severe traffic congestion in Madukkarai is causing hardship to residents and Kerala-bound commuters. Delayed railway ove...

கோவை மாநகராட்சி குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 86 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செப்டம்பர் 22, 2026 அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மேயர் ரங்...

கூடலூர் நகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு ஆய்வு; தனியார் நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் நகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏஇடியிஎஸ் கொசுக்களின் உற்பத்தி...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப். 24-ல் நேரடி மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தனியார் இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள இளமறிவியல் இடங்களை நிரப்ப நேரடி மாணவர...