கோவை துடியலூரில் மத மோதல் அபாயம்: இந்து அமைப்புகள் காவல் நிலையத்தில் புகார்

கோவை துடியலூரில் பள்ளிவாசல் முன் தொழுகை நடத்துவதால் போக்குவரத்து நெரிசல் மற்றும் மத மோதல் அபாயம் குறித்து இந்து அமைப்புகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளன. பங்களாதேஷ் தீவிரவாதிகள் ஊடுருவல் குறித்தும் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.



கோவை: கோவை துடியலூர் பகுதியில் மத மோதல் அபாயம் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளதாக இந்து அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன. இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி, இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

புகார் மனுவில் கூறியுள்ள விவரங்கள்:

துடியலூர் சந்தை மைதானத்துக்கு பின்புறம் உள்ள 18 கிராமங்களுக்கு சொந்தமான வரலாற்று சிறப்புமிக்க அரவான் திருக்கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் 18 நாட்கள் திருவிழா நடைபெறும். அப்போது அருகிலுள்ள மாகாளியம்மன், மங்கையம்மன், பொன்னியம்மன், விநாயகர் கோயில்களிலும் விழாக்கள் நடைபெறும்.

விநாயகர் கோயில் முதல் மாகாளியம்மன் கோயில் வரையிலான பாதையில் ஒரு பள்ளிவாசல் உள்ளது. கடந்த ஒரு மாதமாக வெள்ளிக்கிழமைகளில் மதியம் 1 மணி முதல் 2 மணி வரை அந்த வழியாக யாரும் செல்லக்கூடாது என்று கூறி பள்ளிவாசல் முன்பு தொழுகை நடத்துகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசலும், சட்டம் ஒழுங்கு பிரச்னையும் ஏற்படுகிறது.

பள்ளிவாசல் உள்ளே தொழுகை நடத்தினால் பிரச்னை இல்லை. ஆனால் வெளியில் தொழுகை நடத்துவதால் மற்ற மத மக்கள் அந்த வழியாக செல்ல முடியவில்லை.

திருப்பூர் போன்று துடியலூர் பகுதிகளிலும் பங்களாதேஷ் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக சந்தேகம் உள்ளது. இது குறித்து உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வக்பு வாரியம் மூலம் சில இடங்களில் பள்ளிவாசலுக்கு சொந்தமான சொத்துகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு சரியான ஆதாரம் இல்லை. இதனால் அந்த பகுதி மக்கள் தங்கள் சொத்துகளை விற்கவோ, வாங்கவோ முடியாமல் தவிக்கின்றனர்.

துடியலூர், அப்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இதுபோன்ற பிரச்னைகள் உள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுத்து சரி செய்ய வேண்டும் என்றும் புகார் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...