பவன் கல்யாண் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்: கோவை காவல் ஆணையரிடம் வெண்மணி மனு

திராவிட தமிழர் கட்சி தலைவர் வெண்மணி, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளார். மதக்கலவரம், சாதி பாகுபாடு தூண்டும் வகையில் பேசியதாக குற்றம்சாட்டியுள்ளார்.



Coimbatore: திராவிட தமிழர் கட்சி தலைவரும் வழக்கறிஞருமான வெண்மணி, கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு ஒன்று அளித்துள்ளார். அதில், ஆந்திர மாநில துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண், திருப்பதியில் தமிழர்கள் மத்தியில் பேசும்போது தமிழகத்தில் இந்து மதத்தை பற்றி இழிவாக பேசுகிறார்கள், அவர்களுக்கு எதிராக ஏன் கொந்தளிக்க கூடாது என பேசியது அதிர்ச்சி அளிப்பதாகவும், இது மதக்கலவரத்தை தூண்டுவது போல் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மாட்டு கொழுப்பு குறித்தும் பேசியது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களை இழிவு படுத்துவது போல் உள்ளதாகவும், எனவே அவர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.



இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெண்மணி, "பவன்கல்யாண் இரு மாநில மக்களிடையே பகையை உருவாக்கி பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாகவும், பல்வேறு மதமக்களிடையே மதக்கலவரத்தையும் தூண்டும் விதமாகவும் பேசி வருகிறார். இது தண்டனைக்குரிய குற்றம் ஆகும்" என்றார்.

திருப்பதியில் வழங்கப்பட்ட பிரசாதத்தில் மாட்டிறைச்சி கொழுப்பு தடவியதால் தீட்டு பட்டுவிட்டதென தொடர் பிரச்சாரம் செய்வது, காலகாலமாக மாட்டிறைச்சியை உணவாக உட்கொள்பவர்களையும், தலித்துகளையும் சாதி ரீதியாக இழிவுபடுத்தும் செயலாகும் என்றும் வெண்மணி குறிப்பிட்டார்.

"தமிழக துணை முதல்வர் உதயநிதி அவர்கள் சொன்ன அரசியல் சட்டவிரோத சாதிய வருணாசிரம சனாதனக் கட்டமைப்பு ஒழிப்பு குறித்து தான் பேசியிருந்தார். ஆனால் நடிகர் பவன்கல்யாண் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றபோதும், துணை முதலமைச்சராக பதிவேற்றபோதும் எடுத்துக் கொண்ட இரகசிய காப்பு பிரமாணத்தை மீறி சமய சார்புடன் நடந்து கொள்வது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதாகும்" என்று வெண்மணி தெரிவித்தார்.

இந்திய குற்றவியல் சட்டங்களின்படி கிரிமினல் குற்றம் குறித்து தகவல் தெரிந்த எந்த ஒரு நபரும் காவல் துறையில் புகார் அளிக்கலாம் என்ற அடிப்படையில் பவன் கல்யாண் மீது புகார் அளிப்பதாகவும், உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டியது காவல்துறையின் கடமை என்றும் வெண்மணி வலியுறுத்தினார். காவல்துறை நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க போவதாகவும் அவர் எச்சரித்தார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...