திருப்பதி லட்டு விவகாரம் மக்களை திசைதிருப்பும் செயல் - சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் குற்றச்சாட்டு

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், பாலஸ்தீன் போர், சாம்சங் தொழிலாளர் பிரச்சினை, பழங்குடி மக்கள் நிலம் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.


கோவை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கோவை மாவட்ட கட்சி அலுவலகத்தில் இன்று (அக்.6) செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், பாலஸ்தீன் போரில் 45,000க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளதாகவும், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்படுவதோடு, நேரடி போரிலும் ஈடுபட்டிருப்பது உலக அளவில் பதட்டமான சூழலை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தியாவைப் பொறுத்தவரை, ஜவஹர்லால் நேரு காலத்திலிருந்தே பாலஸ்தீனுக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும், பாலஸ்தீனத்தை தனி நாடாக இந்தியா அங்கீகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். தற்போதைய மோடி அரசு இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை மேற்கொண்டிருப்பது இந்தியாவின் அணிசேரா கொள்கைக்கு எதிரானது என்றும், இன அழிப்புக்கு ஆதரவு அளிக்கும் போக்கு என்றும் தெரிவித்தார். ஒன்றிய அரசு இந்த நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும், இதனை முன்னிட்டு 7ம் தேதி நாடு முழுவதும் இடதுசாரி கட்சிகள் சார்பில் போராட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

சென்னை காஞ்சிபுரத்தில் உள்ள சாம்சங் நிறுவனத்தில் பணிபுரிவோர் சங்கம் அமைக்க முடிவெடுத்துள்ளனர் என்றும், அதற்கு உரிமையும் உண்டு என்றும் கூறிய அவர், சாம்சங் நிறுவனம் அதனை மறுப்பதாகவும் தெரிவித்தார். இதனைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில், இந்தப் பிரச்சினைக்கு மூன்று அமைச்சர்களை நியமித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்தார்.

கோவையில் பழங்குடி மலைவாழ் மக்கள் வசிக்கும் இடங்களை தனியார் விடுதி நிறுவனத்தினர் ஆக்கிரமிப்பு செய்வதாகவும், சுடுகாடு உட்பட பல இடங்களை ஆக்கிரமிப்பு செய்யும் போக்கு அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார். இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

ஈஷா வனத்திற்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், பெண்களை மூளைச்சலவை செய்து தாய் தந்தை சொல்வதைக் கூட கேட்க மறுக்கும் அளவிற்கு நிலைமை உள்ளதாகவும் குறிப்பிட்டார். ஈஷா மீது பாலியல் வழக்கில் உச்சநீதிமன்றம் விசாரணைக்கு தடை விதித்துள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

திருப்பதி லட்டு விவகாரம் குறித்து பேசிய அவர், இது மக்களைத் திசைதிருப்பும் அநாகரீகமான செயல் என்றார். நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் உள்ளபோது, இந்த விவகாரம் அரசியல் அநாகரீகம் என சாடினார்.

மேலும், சிறு குறு தொழில்களைக் காப்பாற்ற வேண்டும் என்றும், மின் கட்டண உயர்வை மாநில அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், தொழில்களைக் காப்பாற்றுவதற்கு மூலப்பொருட்கள் எளிதில் கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...