ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் மேம்பட்ட அவசர சிகிச்சை பிரிவு திறப்பு: அமைச்சர் மா.சுப்ரமணியன் பங்கேற்பு

கோவையில் ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் 24 மணிநேர அவசர சிகிச்சை பிரிவை அமைச்சர் மா.சுப்ரமணியன் திறந்து வைத்தார். அதிநவீன மருத்துவ தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய இப்பிரிவு மக்களுக்கு சிறந்த சேவை வழங்கும்.



கோவை: கோவை ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் அதிநவீன மருத்துவ தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட கட்டமைப்பு வசதிகள் கொண்ட 24 மணிநேர அவசர சிகிச்சை பிரிவை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இன்று திறந்து வைத்து பார்வையிட்டார்.



இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, கோவை மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.



மேலும், குப்புசாமி நாயுடு அறக்கட்டளை துணைத்தலைவர் R.கோபிநாத், ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி Dr.ரகுபதி வேலுசாமி, ஜி.கே.என்.எம் மருத்துவமனை மருத்துவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.



அமைச்சர் மா.சுப்ரமணியன் பேசுகையில், "தமிழகத்தின் மருத்துவத்துறை அடையாளங்களில் ஒன்றாக ஜி.கே.என்.எம் மருத்துவமனை உள்ளது. இம்மருத்துவமனை பத்தாண்டுகளுக்கு முன்னரே புற்றுநோய்க்கான விழிப்புணர்வை ஏற்படுத்திய மருத்துவ மையமாகும்" என்றார்.

"முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி கடந்த ஆண்டு, ஈரோடு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் 18 வயது நிரம்பிய அனைத்து பொதுமக்களுக்கும் புற்றுநோய் பரிசோதனை செய்யும் திட்டம் துவங்கப்பட்டது. இதில் 110க்கும் மேற்பட்டவர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, தமிழ்நாடு முழுவதும் 38 வருவாய் மாவட்டங்களிலும் புற்றுநோய் கண்டறியும் பணியை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் கூறுகையில், "மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48, கலைஞரின் வருமுன் காப்போம், பாதம் பாதுகாப்போம் உள்ளிட்ட 36 திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் பத்துக்கும் மேற்பட்ட திட்டங்கள் உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத தனித்துவமான திட்டங்களாகும்" என்றார்.

"இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த 1 லட்சம் ரூபாய் தொகை விரைவில் 2 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்" என்றும் அவர் அறிவித்தார்.

இறுதியாக, புற்றுநோய் மற்றும் இருதய பாதிப்புகளுக்கான நடவடிக்கையில் ஜி.கே.என்.எம் மருத்துவமனை அரசுடன் ஒருங்கிணைந்து செயல்பட புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என்று அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.

Newsletter

கோவையில் மாணவர்களுக்கு வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.63க்கு உட்பட்ட இராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் செப்டம்பர் 25, 2...

கோவை மேற்கு மண்டலத்தில் குப்பைகளை நான்கு வகைகளாக தரம் பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணர்வு நடைபயணம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.38க்குட்பட்ட கல்வீரம்பாளையம் பள்ளி முதல் பொம்மனாம்பாளையம் கோயில் வரை, குப்பைகள...

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...

2016 ஆனைமலை இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஆனைமலை காவல் நிலையத்தில் குற்ற எண் 369/2016-ன் கீழ் பதிவான கொலை வழக்கில், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாப்பான் @ சுதானந்தம...

ஜெம் வீரமணி வழக்கு: கோவை காவல் ஆணையர் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகா...

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...