கோவையில் ஏடிஎம்களில் நூதன முறையில் பணம் திருட்டு: சிசிடிவி காட்சிகள் வெளியீடு

கோவை குனியமுத்தூரில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம்மில் இரண்டு மர்ம நபர்கள் நூதன முறையில் பணம் திருடியுள்ளனர். இதே போன்று 5 ஏடிஎம்களில் திருட்டு நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.



கோவை: கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரத்தில் நூதன முறையில் பணம் திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு குனியமுத்தூர் எஸ்பிஐ ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்ற வாடிக்கையாளர்களுக்கு, பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. ஆனால் உண்மையில் பணம் வரவில்லை. 24 மணி நேரத்தில் பணம் திரும்ப வரும் என எதிர்பார்த்த வாடிக்கையாளர்கள், அவ்வாறு நடக்காததால் வங்கி கிளையில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் வங்கி ஊழியர்கள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது இரண்டு மர்ம நபர்கள் ஏடிஎம் இயந்திரத்தின் பணம் வெளியேறும் பகுதியில் 'டேப்' ஒட்டி விட்டு வெளியேறியது தெரிய வந்தது. பின்னர், வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முயன்று தோல்வியுற்று வெளியேறிய பிறகு, அதே நபர்கள் மீண்டும் உள்ளே நுழைந்து ரூ.30,000 திருடிச் சென்றது பதிவாகியுள்ளது.

இதையடுத்து வங்கி கிளை மேலாளர் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார், சந்தேக நபர்கள் சென்ற பாதையில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் சேகரித்து விசாரணையைத் தொடங்கினர்.

முதல்கட்ட விசாரணையில், இதே முறையில் கோவை பெரியகடை வீதி ஏடிஎம் மற்றும் திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள ஏடிஎம் உள்ளிட்ட மொத்தம் 5 ஏடிஎம்களில் திருட்டு நடந்துள்ளது தெரியவந்தது.

தற்போது தப்பியோடிய சந்தேக நபர்களைக் கண்டறிய தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...

கோவையில் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவுக்கு இறுதி வாய்ப்பு; ஜூலை 31-க்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தல்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3.97 லட்சம் பயனாளிகள் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ளனர். ஜூலை 31, 20...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...