தலித் மக்கள், பெண்கள், குழந்தைகள் மீதான தாக்குதல்களை கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம்

கோவையில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் தலித் மக்கள், பெண்கள், குழந்தைகள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தி BSNL அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



Coimbatore: கோவையில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் தலித் மக்கள், பெண்கள், குழந்தைகள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தியா முழுவதும் தலித் மக்கள், பெண்கள், குழந்தைகள் மீதான தாக்குதல்களை, மத்திய அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தி கோவையில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தினர் BSNL அலுவலகத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மேலும், சாதி ஆணவ படுகொலைகளை தடுக்க தனிச் சட்டம் இயற்றுதல், புதிய கல்விக் கொள்கையை கைவிடுதல், IIT, IIM போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துதல், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துதல், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில் 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மத்திய அரசை கண்டித்தும் கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப். 24-ல் நேரடி மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தனியார் இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள இளமறிவியல் இடங்களை நிரப்ப நேரடி மாணவர...

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...