மடத்துக்குளம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் தர்ணா போராட்டம்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் வழித்தடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால், பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு 50க்கும் மேற்பட்ட மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் நடவடிக்கை உறுதியளித்ததால் தற்காலிகமாக போராட்டம் கைவிடப்பட்டது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தும் வழித்தடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதை கண்டித்து, பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மடத்துக்குளம் 13வது வார்டு கணேஷ்புரம் பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நீண்ட காலமாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதையை தற்பொழுது தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து வணிக வளாகம் கட்டி வருகின்றார். இதனால் அவசர தேவைக்காக அவசர ஊர்தி கூட வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக மடத்துக்குளம் பேரூராட்சி செயல் அலுவலரிடம் கடந்த மே 31 அன்று புகார் மனு வழங்கப்பட்டது. ஆனால், தற்பொழுது வரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாறாக, ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது.



இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள், நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மடத்துக்குளம் பேரூராட்சி அலுவலகத்தை இன்று 50க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், ஆக்கிரமிப்பு குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து, மக்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.

எனினும், பொதுமக்கள் பயன்படுத்தி வந்த வழித்தடம் கிடைக்காதபட்சத்தில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...