கோவை: ஆட்டோ ஸ்டாண்டில் இடையூறு செய்யும் வெளி ஆட்டோ ஓட்டுனர்களை அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை சாந்தி தியேட்டர் அருகே உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் வெளி ஆட்டோ ஓட்டுநர்கள் இடையூறு செய்வதாக கூறி, அவர்களை அகற்றக் கோரி கோவை மாவட்ட அண்ணா ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்கள் சங்கம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தது.



Coimbatore: கோவை மாவட்ட அண்ணா ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்கள் சங்கத்தினர் ஆட்டோ ஸ்டாண்டில் இடையூறு செய்யும் வெளி ஆட்டோ ஓட்டுனர்களை அகற்றக்கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

கோவை சாந்தி தியேட்டர் எதிரில் ஸ்டேட் பேங்க் சாலை R.D.O அலுவலகம் முன்பு உள்ள ஆட்டோ நிறுத்துமிடத்தில் பல ஆண்டுகளாக ஆட்டோ ரிக்ஷா ஓட்டி வாழ்க்கை நடத்தி வரும் ஓட்டுநர்கள், கடந்த சில நாட்களாக வெளி ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் தங்களது ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோக்களை நிறுத்தி வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வருவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.



இந்த விஷயம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்த அவர்கள், தொடர்ந்து வெளி ஆட்டோ ஓட்டுநர்கள் இந்த ஆட்டோ நிறுத்தத்திலிருந்து வாடகைக்கு ஆட்டோ ஓட்டி தங்களது வாழ்வாதாரத்தை பாதிப்பதாகவும் குற்றம்சாட்டினர். மேலும், வெளி ஆட்டோ ஓட்டுநர்கள் சார்பில் அங்கு கொடிக்கம்பமும் போர்டும் வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறினர்.

கோவை மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கப் பேரவை மாவட்டச் செயலாளர் அசோக் குமார் கூறுகையில், "வெளியில் இருந்து வரும் ஆட்டோ ஓட்டுநர்களால் இங்கு பல ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வந்த 20க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதற்கு உரிய தீர்வு அளிக்க வேண்டும். இல்லையென்றால் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்" என்று எச்சரித்தார்.

இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும், தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் கோரி கோவை மாவட்ட அண்ணா ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...