பீளமேடு அவினாசி சாலை உயர்மட்ட ஏறுதள பாதையை மாற்றியமைக்க கோரி மக்கள் மனு

பீளமேடு விளாங்குறிச்சி அவினாசி சாலை சந்திப்பில் உள்ள உயர்மட்ட ஏறுதள பாதையை மாற்றி அமைக்கக்கோரி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


Coimbatore: பீளமேடு விளாங்குறிச்சி அவினாசி சாலை சந்திப்பில் உள்ள உயர்மட்ட ஏறுதள பாதையை மாற்றி அமைக்கக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் வியாபாரிகளும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

அத்தியாவசிய தேவைகளுக்காக செல்லும் பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்பவர்கள், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய பெரிய நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் என பெரும்பாலானோர் விளாங்குறிச்சி சாலையை தினமும் பயன்படுத்தி வருவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.



இந்த மேம்பாலம் அமைக்கப்படுவது மேற்படிச்சாலையில் பயணம் செய்யும் அனைவருக்கும் பெரும் பாதிப்பையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தி உள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் பீளமேடு விளாங்குறிச்சி அவினாசி சாலை சந்திப்பில் உள்ள உயர்மட்ட ஏறுதள பாதையை மாற்றி அமைத்து தர வேண்டும் எனக் கோரி மாவட்ட ஆட்சியருக்கு அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடக்கம்

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடங்கப்பட்டது. விழாவில் 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரிய...