காரமடை நகராட்சியில் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் ஊதிய தாமதத்திற்கு எதிராக போராட்டம்

காரமடையில் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் ஊதிய தாமதத்திற்கு எதிராக பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறை பேச்சுவார்த்தைக்கு பின் நாளை பணிக்கு திரும்ப ஒப்புக்கொண்டனர்.



கோவை: காரமடை நகராட்சியில் ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்கவில்லை என குற்றம் சாட்டி துப்புரவு பணியாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் காரமடை நகராட்சியில் 28 வார்டுகள் உள்ள நிலையில் இந்த நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மை பணி மேற்கொள்ள ஒப்பந்த அடிப்படையில் எண்பதுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதியமாக தினமும் கூலி என்ற அடிப்படையில் 507 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.



ஒப்பந்ததாரர் மாதம் ஒரு முறை ஊதியம் வழங்கி வந்த நிலையில் அந்த ஊதியத்தை உரிய நேரத்தில் முறையாக வழங்குவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூய்மை பணியாளர்களுக்கு பிடித்தம் செய்யும் பிஎஃப், இஎஸ்ஐ போன்ற விபரங்கள் ஒப்பந்ததாரர் தங்களுக்கு தெரியப்படுத்துவதில்லை என்றும் பணியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.



ஊதியத்தை மாதத்தில் ஒன்று முதல் ஐந்தாம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்ற நிலையில், ஒப்பந்ததாரர் இருபதாம் தேதி வரை ஊதியம் வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாக ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனை கண்டித்து இன்று பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் போராட்டம் காரணமாக காரமடை நகராட்சி பகுதிகளில் குப்பைகளை அள்ளும் தூய்மை பணி பாதிக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில் தூய்மை பணியாளர்களிடம் நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.



பேச்சுவார்த்தையில் நாளை ஊதியம் வழங்க ஒப்பந்ததாரர் உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதனையடுத்து பணிகளையும் நாளை துவக்குவதாக தெரிவித்துவிட்டு தூய்மை பணியாளர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். இதன் காரணமாக காரமடை நகராட்சி பகுதிகளில் தூய்மை பணிகள் இன்று பாதிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...