மேட்டுப்பாளையம் அருகே குட்டையில் முதலைகளை பிடிக்க 24 மணி நேரமாக வனத்துறையினர் முயற்சி

மேட்டுப்பாளையம் அருகே பட்டக்காரனூர் கிராமத்தில் உள்ள குட்டையில் இரண்டு முதலைகள் இருப்பது கண்டறியப்பட்டது. வனத்துறையினர் 24 மணி நேரமாக முதலைகளை பிடிக்க முயற்சி செய்து வருகின்றனர்.



கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பட்டக்காரனூர் கிராமத்தில் குட்டை ஒன்றில் முதலை நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, கடந்த 24 மணி நேரமாக முதலைகளை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த பருவமழையின் போது வெள்ளப்பெருக்கில் அடித்து வரப்பட்ட முதலை, பட்டக்காரனூர் குட்டையில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழ்ந்து வந்தது தெரியவந்தது. முதலையை பிடிக்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டபோது, இரண்டு முதலைகள் தண்ணீரில் இருப்பது கண்டறியப்பட்டது.

குட்டையில் சுமார் 10 அடி ஆழத்திற்கு தண்ணீர் நிரம்பியிருந்த நிலையில், அதனை வெளியேற்றி முதலைகளை பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டனர்.



நேற்று காலை முதல் மோட்டார் பம்ப் செட்டுகள் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணி தொடங்கப்பட்டது. தண்ணீரின் அளவு அதிகமாக இருந்ததால், இப்பணி இரவு முழுவதும் தொடர்ந்தது.

இரவில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டு, ஜேசிபி இயந்திரங்கள் பாதுகாப்பு பணிக்கு நிறுத்தப்பட்டன. முதலைகள் உள்ள பகுதியை சுற்றி நைலான் வலைகள் அமைக்கப்பட்டு, வனத்துறையினரின் கண்காணிப்பில் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோஜ் குமார் தலைமையிலான வனத்துறையினர் இரவு பகல் பாராமல் முதலைகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.



தற்போது மூன்று அடி அளவிற்கு தண்ணீர் மற்றும் சேறு உள்ள நிலையில், அவற்றை அகற்றிய பின்னர் முதலைகளை பிடிக்க வனத்துறையினர் தயாராகி வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...