கோவை - அபுதாபி விமான சேவை: குளிர்கால அட்டவணையில் இடம்பெறாததால் தொடர்வதில் சிக்கல்

கோவை - அபுதாபி இடையேயான இண்டிகோ விமான சேவை குளிர்கால அட்டவணையில் இடம்பெறவில்லை. ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட இந்த சேவை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் அனுமதி கிடைக்கவில்லை என இண்டிகோ தெரிவித்துள்ளது.


Coimbatore: கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு தொடங்கப்பட்ட நேரடி விமான சேவை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் இண்டிகோ விமான நிறுவனம் இந்த சேவையை தொடங்கியது. பல ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு தொடங்கப்பட்ட இந்த சேவை பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

தற்போது வாரத்தில் மூன்று நாட்கள் இந்த சேவை வழங்கப்பட்டு வருகிறது. 186 பயணிகள் பயணிக்கக்கூடிய 'ஏர்பஸ் ஏ320' ரக விமானம் இந்த சேவைக்குப் பயன்படுத்தப்படுகிறது. ஆகஸ்ட் மாதத்தில் கோவையில் இருந்து அபுதாபி செல்லும்போது 93 சதவீத பயணிகளுடனும், அபுதாபியில் இருந்து கோவைக்கு வரும்போது 57 சதவீத பயணிகளுடனும் விமானம் இயக்கப்பட்டது.

இந்நிலையில், அக்டோபர் கடைசி வாரத்தில் தொடங்கி மார்ச் கடைசி வாரம் வரை அமல்படுத்தப்படும் குளிர்கால அட்டவணையில் இந்த சேவை இடம்பெறவில்லை. இது விமான பயண ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து இண்டிகோ விமான நிறுவன அதிகாரிகள் கூறுகையில், "கோவை விமான நிலையத்தில் குளிர்கால அட்டவணையில் அபுதாபி விமான சேவைக்கு விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் (DGCA) அனுமதி இதுவரை கிடைக்கவில்லை. இதற்கும் விமான நிறுவனங்களுக்கும் தொடர்பில்லை" என்று தெரிவித்தனர்.

இந்த விமான சேவை தொடர்ந்து இயக்கப்படுமா என்பது குறித்த தெளிவான தகவல் இன்னும் வெளியாகவில்லை. விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் அனுமதி கிடைத்தால் மட்டுமே இந்த சேவையை தொடர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...