தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மலர் மற்றும் அலங்கார பயிர் நாற்றாங்கால் தொழில்நுட்பப் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் 19 அன்று மலர் மற்றும் அலங்கார பயிர்களுக்கான நாற்றாங்கால் தொழில்நுட்பப் பயிற்சி நடைபெறுகிறது. பொதுமக்கள், மாணவர்கள், தொழில் முனைவோர் பங்கேற்கலாம்.


Coimbatore: கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மலர் மற்றும் அலங்கார பயிர்களுக்கான நாற்றாங்கால் தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி செப்டம்பர் 19 அன்று நடைபெற உள்ளதாக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இந்தப் பயிற்சி காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும். பொதுமக்கள், அறிவியல் மாணவர்கள், புதிய தொழில் முனைவோர்கள் மற்றும் மகளிர் இந்தப் பயிற்சியில் கலந்து கொண்டு பயனடையலாம்.

மலர் மற்றும் அலங்கார பயிர்களின் நாற்றங்கால் குறித்த தொழில்நுட்பங்கள் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பதே இந்தப் பயிற்சியின் முக்கிய நோக்கமாகும்.

பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் ரூ.1,000 கட்டணம் செலுத்தி செப்டம்பர் 18-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு முனைவர் சு.கார்த்திகேயன் (99654-35081), முனைவர் சீ. பா.தாமரைச்செல்வி (9843338666) ஆகியோரை மலரியல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...