உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 24வது ஆண்டு பரிசளிப்பு விழா: சிறந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு கலைக் கல்லூரியில் முன்னாள் மாணவர் சங்க அறக்கட்டளை சார்பில் 24வது ஆண்டு பரிசளிப்பு விழா நடைபெற்றது. சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு கலைக் கல்லூரியில் பாரதியார் பல்கலைக்கழக அளவில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு இன்று பரிசளிப்பு விழா நடைபெற்றது. முன்னாள் மாணவர் சங்க அறக்கட்டளை சார்பில் 24வது ஆண்டாக இந்த விழா நடத்தப்பட்டது.

இந்த விழாவிற்கு கல்லூரி முதல்வர் கல்யாணி தலைமை வகித்தார்.



விழாவில் 2023-2024 ஆம் ஆண்டில் கல்லூரி அளவில் துறை வாரியாக முதல் மதிப்பெண் பெற்ற 24 மாணவர்களுக்கு ரொக்க பரிசாக தலா ரூ.3,000 மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.



மேலும், பல்கலைக்கழக தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற 15 மாணவர்களுக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.



சிறப்பு பரிசாக, வணிகவியல் துறையில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி சபரீஷ்வரிக்கு ஒரு கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும் முன்னாள் மாணவருமான சின்னத்துரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.





விழாவில் அறக்கட்டளை நிர்வாகிகளான ஆடிட்டர் கந்தசாமி, ஆடிட்டர் கண்ணன், ராஜமாணிக்கம், பேராசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ மாணவிகள் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகளான முனைவர் கிருஷ்ணன், பேராசிரியர் முகமது ஜாபர் அலி உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு விழா மாணவர்களின் கல்வி சாதனைகளை கொண்டாடும் விதமாக சிறப்பாக நடைபெற்றது.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...