கோவையில் பர்னிச்சர் குடோனில் பயங்கர தீ விபத்து: ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

கோவை சின்னவேடம்பட்டியில் பர்னிச்சர் குடோனில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.



கோவை: கோவை மாவட்டம் சரவணம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்னவேடம்பட்டி மினி பேருந்து சாலையில் உள்ள ஊர் கவுண்டர் தோட்டத்தில் இன்று நண்பகல் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

மூக்கையா என்பவருக்கு சொந்தமான 'பாலாஜி ஃகுஸ்ஷன் ஒர்க்ஸ்' என்ற பர்னிச்சர் குடோனில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. குடோனுக்கு அருகில் செல்லும் தாழ்வழுத்த மின்கம்பி வடம் அதிக காற்றினால் ஒன்றுக்கொன்று உரசியதில் மின் கசிவு ஏற்பட்டு தீப்பொறி உருவாகியதால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிகிறது.



சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மூன்று தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பர்னிச்சர் பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின. மேலும், தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சியளித்தது.

இந்த சம்பவம் தொடர்பாக சரவணம்பட்டி காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...