மேட்டுப்பாளையத்தில் வீடு வீடாக சென்று பாஜக உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டார் மத்திய இணை அமைச்சர் எல். முருகன்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பொன்விழா நகரில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் வீடு வீடாகச் சென்று பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாமை நடத்தினார். அவர் மத்திய அரசின் சாதனைகளையும், பிரதமர் மோடியின் நிர்வாகத்தையும் எடுத்துரைத்தார்.


Coimbatore: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் துவங்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் முகாம் அலுவலகம் அமைந்துள்ள பொன்விழா நகர் பகுதியில் இன்று பா.ஜ.க உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.

பொன்விழா நகரில் உள்ள வீடுகளுக்கு கட்சி நிர்வாகிகளுடன் நேரடியாக சென்ற மத்திய இணை அமைச்சர் எல். முருகன், காலை 10 மணிக்கு மத்திய அரசின் சாதனைகளை கூறியும் பிரதமர் மோடியின் திறமையான அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து எடுத்து கூறி உறுப்பினர் சேர்க்கை செய்தார்.



பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கையை செய்தார். இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க கோவை வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா, துணை தலைவர் விக்னேஷ் உள்ளிட்ட முக்கிய பா.ஜ.க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...