தேர்தல் ஆணையம் அங்கீகாரம்: கோவையில் தமிழக வெற்றிக் கழகத்தினர் கொண்டாட்டம்

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதை அடுத்து, கோவை சுந்தாராபுரத்தில் கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இது கட்சியின் முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது.



கோவை: நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதனை அடுத்து கோவை சுந்தாராபுரம் பகுதியில் தவெக கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். தற்போது இந்த கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கி இருப்பதாக கட்சியின் தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதன் மூலம் தவெக கட்சி பதிவு செய்யப்பட்ட கட்சியாக மாறியுள்ளது.

நேற்று முதலே, தவெக தலைமையிடம் இருந்து முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்றும், வெற்றி கொண்டாட்டத்திற்கு தயாராகுமாறும் கட்சி தொண்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.



இந்நிலையில், இன்று வெளியான விஜய்யின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தவெக கட்சியினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.



இந்த அங்கீகாரத்தை அடுத்து தமிழகம் முழுவதும் தவெக கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.



கோவையில், குறிப்பாக சுந்தாராபுரம் பகுதியில் தவெக கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...