பொள்ளாச்சி அருகே பழங்குடியினருக்கு வழங்கப்பட்ட பட்டா நிலங்களை அளவீடு செய்யக் கோரி விடுதலை சிறுத்தைகள் மனு

பொள்ளாச்சி அருகே புரவிபாளையத்தில் 3 ஆண்டுகளுக்கு முன் பழங்குடியினருக்கு வழங்கப்பட்ட பட்டா நிலங்களை அளவீடு செய்யக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



Coimbatore: பொள்ளாச்சி அருகே உள்ள புரவிபாளையம் கிராமத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு 27 பழங்குடியின மக்களுக்கு அரசு சார்பில் வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால், பட்டா வழங்கி மூன்று ஆண்டுகள் கடந்தும் இதுவரை நில அளவீடு செய்து தரப்படவில்லை என்று தெரிகிறது.

இந்நிலையில், நில அளவீடு செய்து தர வலியுறுத்தி இன்று பொள்ளாச்சியில் விடுதலை சிறுத்தை கட்சியின் மண்டல துணைச் செயலாளர் பிரபு தலைமையில் பழங்குடியின மக்கள் சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யாவிடம் மனு அளித்தனர்.

நில அளவீடு செய்து தரக்கோரி பலமுறை வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்களிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர்கள் குறிப்பிட்டனர். எனவே, நில அளவை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு விட வேண்டும் என்று விடுதலை சிறுத்தை கட்சியினர் வலியுறுத்தினர்.

பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இந்த நில அளவீடு முக்கியமானது என்றும், இது அவர்களின் சமூக-பொருளாதார நிலையை உயர்த்த உதவும் என்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் தெரிவித்தனர். சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா இந்த விவகாரத்தை கவனத்தில் கொண்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...