கற்பகம் பல்கலைக்கழகத்தில் முதுநிலை முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா

கோயம்புத்தூர் கற்பகம் பல்கலைக்கழகத்தில் முதுநிலை முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா 'வ்ருத்தி–2024' நடைபெற்றது. கல்விக்குழுமத் தலைவர் டாக்டர் இராச. வசந்தகுமார் தலைமையுரையாற்றினார்.


Coimbatore: கோயம்புத்தூர் கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் 'வ்ருத்தி–2024' விழா 14.08.2024, புதன்கிழமை அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கலை, அறிவியல், வணிகவியல் மற்றும் மேலாண்மையியல் புல முதன்மையர் முனைவர் நா.வெ. பாலாஜி வரவேற்புரை வழங்கினார்.

கற்பகம் கல்விக்குழுமங்களின் தலைவர் டாக்டர் இராச. வசந்தகுமார் விழாவில் தலைமையுரையாற்றினார். அவர் தனது உரையில், "இளைஞர்கள் சமுதாயப் பொறுப்புணர்வு, பொதுநல நோக்கம், புதியவற்றைக் கண்டடைகின்ற ஆர்வம், தொடர் முயற்சி, குறையாத உழைப்பு, தோல்வியிலும் தளராத முயற்சி மற்றும் எவர்க்கும் அன்பு செய்கிற மனிதநேயம் ஆகியவற்றைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.



மேலும் அவர், "தன்னலத்தை மறந்து, நாட்டுக்கு நல்ல தலைவர்களாக மிளிர அரசியல் அறிவியல் சார்ந்தும் இளைஞர்கள் ஆளுமை பெற வேண்டும். வேலைவாய்ப்புக் கல்வி மட்டுமல்லாமல் மெய்ஞானக் கல்வியிலும் நாட்டம் செலுத்த வேண்டும். திருக்குறளை வாழ்வியல் நூலாகக் கொண்டு உயர வேண்டும்" என்று கூறினார்.

பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் ப. வெங்கடாசலபதி, கற்பகம் பல்கலைக்கழகத்தின் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சித்துறையின் சிறப்பு வாய்ப்புகள் குறித்து விளக்கினார்.



விழாவின் நிறைவாக மாணவர் நலன் முதன்மையர் முனைவர் ப. தமிழரசி நன்றியுரை வழங்கினார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...