உடுமலை அருகே பூமிலட்சுமி ஆண்டாள் நாச்சியார் கோவிலில் ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குறிஞ்சேரியில் உள்ள பூமிலட்சுமி ஆண்டாள் நாச்சியார் கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் மற்றும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குறிஞ்சேரியில், புகழ்பெற்ற பூமிலட்சுமி ஆண்டாள் நாச்சியார் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆடிப்பூரத்தையொட்டி சிறப்பு வழிபாடு ஆகஸ்ட் 4ம் தேதி துவங்கியது.

முதல் நாளில், காலையில் கோ பூஜை, சுதர்சன ஹோமம், தன்வந்திரி, மகாலட்சுமி மற்றும் குபேர ஹோமம் நடைப்பெற்றது. ஆகஸ்ட் 5, 6 ம் தேதிகளில் உலக நன்மைக்காகவும் அனைவரும் நோய் நொடியின்றி நீண்ட ஆயுளுடன் நலமாக வாழ துளசி மற்றும் ரோஸ் சம்மங்கி பூக்களால் சிறப்பு லட்சார்ச்சனை நடைபெற்றது.



இதற்கிடையில் முக்கிய நிகழ்வான ஸ்ரீ ரங்கமன்னார் - ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சுவாமிகள் திருக்கல்யாண உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.



பின்னர் மகா தீபாரதனையும் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீரங்க மன்னார்- ஆண்டாள் நாச்சியார் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதைத் தொடர்ந்து மாலை மாற்றுதல், சிறுவர் சிறுமியர் நடனம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

திருக்கல்யாணத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் மஞ்சள் கயிறு, வளையல் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. தனி சன்னதியில் உள்ள ஆண்டாள் நாச்சியாருக்கு பால், தயிர், மஞ்சள் உட்பட பதினாறு வகையான அபிஷேகங்கள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வளையல்கள் அணிவித்து சிறப்பு வழிபாடும் மேற்கொள்ளப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.



விழாவுக்கான ஏற்பாடுகளை குறுஞ்சேரி பூமி லட்சுமி ஆண்டாள் நாச்சியார் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். இந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...