உடுமலையில் உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

உடுமலையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பல்வேறு அமைப்புகள் இணைந்து நடத்திய இப்பேரணியில் அங்கன்வாடி பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. உடுமலை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து இந்த பேரணியை நடத்தினர்.



பேரணி உடுமலை தளி ரோடு பிரிவில் தொடங்கி, மத்திய பேருந்து நிலையம் வழியாக சென்று ரயில்வே சந்திப்பு பாதையில் நிறைவடைந்தது. இப்பேரணியில் 50க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள், 40க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தனியார் கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் கொடி அசைத்து பேரணியை துவக்கி வைத்தார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தீபா பேரணிக்கு தலைமை தாங்கினார். குழந்தைகள் வளர்ச்சி திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் சந்தியப்பிரியா, எண்ணம் போல் வாழ்க்கை அமைப்பின் நிறுவனர் நெல்சன் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...