கோவையில் அருந்ததியர் உள் ஒதுக்கீடு தீர்ப்புக்கு வரவேற்பு: தந்தை பெரியார் திராவிடர் கழகம் கொண்டாட்டம்

அருந்ததியர் உள் ஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்று கோவை காந்திபுரத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் தலைமையில் கொண்டாட்டம் நடைபெற்றது. இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து மகிழ்ச்சி வெளிப்படுத்தப்பட்டது.


கோவை: கோவை காந்திபுரத்தில் அருந்ததியர் உள் ஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்று தந்தை பெரியார் திராவிடர் கழகம் தலைமையில் கொண்டாட்டம் நடைபெற்றது.



2009ஆம் ஆண்டு தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு அருந்ததியினருக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கியது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், 2020ஆம் ஆண்டு ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு தமிழ்நாடு அரசின் அருந்ததியர் உள் ஒதுக்கீடு சட்டம் செல்லும் என தீர்ப்பளித்தது.

இந்நிலையில், தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான ஏழு நீதிபதிகள் அமர்வு நேற்று வழங்கிய தீர்ப்பில், அரசியலமைப்புச் சட்டத்தின் 14வது பிரிவை உள் ஒதுக்கீடு மீறவில்லை எனவும், பட்டியல் வகுப்பினர் வரையறையில் இருந்து உள்பிரிவுகள் விலக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டு, உள் ஒதுக்கீடு வழங்குவதில் தடையில்லை என அறிவித்தது.



இத்தீர்ப்பை வரவேற்று, கோவை காந்திபுரத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து மகிழ்ச்சி வெளிப்படுத்தப்பட்டது.



இந்நிகழ்வில் ஆதித்தமிழர் பேரவை ரவிக்குமார், திராவிட தமிழர் கட்சி செந்தில், புரட்சி கழக முன்னணி மலரவன், தந்தை பெரியார் திராவிடர் கழகம் காமராஜ், கோவில்பிள்ளை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...