மத்திய பட்ஜெட்டை கண்டித்து கோவையில் சாலை மறியல் - 500க்கும் மேற்பட்டோர் கைது

கோவையில் மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதாக கூறி சிபிஎம், சிபிஐ மற்றும் மாணவர் சங்கங்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.


Coimbatore: மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதாக கூறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய மாணவர் சங்க அமைப்பினர் கோவை பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிபிஎம் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். போராட்டக்காரர்கள் சாலையில் அமர்ந்து மத்திய பாஜக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.



போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து வாகனங்களில் அழைத்து சென்றனர். இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் பேசுகையில், "ஒன்றிய அரசின் நிதி நிலை அறிக்கையை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிதிநிலை அறிக்கை ஒட்டுமொத்த தேசத்திற்கான அறிக்கை அல்ல. தமிழ்நாடு மற்றும் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன" என்றார்.



அவர் மேலும், "ஜிஎஸ்டி உள்ளிட்ட ஏராளமான வரியை செலுத்திக் கொண்டிருக்கும் தமிழ்நாடு முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. அதானி அம்பானி குடும்பங்கள் மேலும் வளர்வதற்கு உதவும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டிற்கு எதிரான பட்ஜெட் இது" என்று குற்றம் சாட்டினார்.

சிபிஎம் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கூறுகையில், "வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதற்கோ, நலிந்து வரும் விவசாயத்தை பாதுகாப்பதற்கோ, சிறு குறு தொழில்களை பாதுகாப்பதற்கோ, விலைவாசி உயர்வால் கஷ்டப்படும் மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கோ இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு கிடையாது" என்றார்.



"அரசியலமைப்புச் சட்டத்தின் முக்கிய கோட்பாடான கூட்டாட்சியில் பாஜக ஆளாத மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு என்பது முற்றிலும் மறுக்கப்பட்டுள்ளது. ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு எதிராகவும், முதலாளிகளுக்கு ஆதரவாகவும் இருக்கும் இந்த பட்ஜெட்டுக்கு எதிராக இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது" என்று அவர் தெரிவித்தார்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...