தேர்தலில் செந்தில் பாலாஜி இருந்தால் பலமாக இருக்கும்: அமைச்சர் முத்துசாமி

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் சிறுதானிய உணவகத்தை திறந்த பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி, செந்தில் பாலாஜி குறித்தும், வீடு கட்டும் திட்டம் பற்றியும் கருத்து தெரிவித்தார்.


கோவை: கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் சுய உதவி குழு சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிறுதானிய உணவகத்தை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி, பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.



வீடு கட்டும் திட்டம் குறித்து பேசிய அவர், "எளிய மக்கள் காலதாமதமின்றி வீடு கட்டுவதற்காக உடனடி அனுமதி கிடைப்பதற்காக இத்திட்டத்தை முதல்வர் துவக்கியுள்ளார். இதில் சதுர அடிக்கு இரு மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக அதிமுகவினர் கூறுவது தவறு. முன்பு போல அனுமதி வாங்கும் நடைமுறை இருந்தால் மக்களுக்கு எவ்வளவு அலைச்சல், எவ்வளவு செலவு ஆகியிருக்கும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். அதிக கட்டணம் இருந்தால் முதல்வர் ஆய்வு செய்வார். ஆனால் அப்படி எதுமில்லை," என்றார்.

செந்தில் பாலாஜி குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர், "வருகின்ற தேர்தலில் செந்தில் பாலாஜி இருந்தால் பலமாக தான் இருக்கும். அவர் இப்போது சிறையில் இருப்பது எங்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் வருத்தம் தான்," என்று கூறினார்.

துணை முதல்வர் பதவி குறித்த கேள்விக்கு பதிலளித்த முத்துசாமி, "இது எங்கள் கட்சி. யாருக்கும் துணை முதல்வர் பதவி கொடுக்க வேண்டும் என்பதில் நாங்கள் தான் முடிவு செய்வோம்," என தெரிவித்தார்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...