கோவை மேயர் தேர்தல் ஆகஸ்ட் 6-ம் தேதி: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் ஆகஸ்ட் 6-ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும் என கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அறிவித்துள்ளார். முன்னாள் மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமாவைத் தொடர்ந்து இந்த தேர்தல் நடத்தப்படுகிறது.


Coimbatore: கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் ஆகஸ்ட் 6-ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும் என கோவை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்தி குமார் பாடி ஜூலை 25-ம் தேதி அறிவித்துள்ளார்.

முன்னதாக, கோவை மாநகராட்சியின் மேயராக இருந்த கல்பனா ஆனந்தகுமார் தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். கல்பனா ஆனந்தகுமார் மேயராக பொறுப்பேற்றவுடன் திமுக கட்சி நிர்வாகிகளை மதிக்காமல் செயல்பட்டதாகவும், மாநகராட்சி மண்டல தலைவர்களுடன் மோதல் போக்குடன் இருந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

மேலும், நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் முறையாக வேலை பார்க்காமல் இருந்தது உள்ளிட்ட தொடர் புகார்கள் எழுந்தன. கல்பனாவின் கணவர் ஆனந்தகுமார் சந்தை வசூல் செய்தது, ஒப்பந்ததாரர்களிடம் கமிஷன் கேட்டது போன்ற சர்ச்சைகளும் எழுந்தன.

இந்நிலையில், கட்சி தலைமையின் அறிவுறுத்தலின் பேரில் உடல்நிலை மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக ராஜினாமா செய்வதாக கூறி, கல்பனா ஆனந்தகுமார் மாநகராட்சி ஆணையர் M சிவகுரு பிரபாகரனிடம் ராஜினாமா கடிதம் அளித்தார்.

இதையடுத்து, கோவை மாநகராட்சி சாதாரண கூட்டத்தில் துணை மேயர் வெற்றிச்செல்வன் தலைமையில் கல்பனா ஆனந்தகுமாரின் ராஜினாமா விவாதமின்றி தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

மாநில தேர்தல் ஆணையம் வழங்கிய அனுமதியின் பேரில், காலியாக உள்ள கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் திமுக தலைமை ஒரு வேட்பாளரை தேர்வு செய்து அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நாளில் மாமன்ற உறுப்பினர்கள் மேயரை தேர்வு செய்வார்கள். திமுக பெரும்பான்மை பலத்துடன் இருப்பதால், திமுக வேட்பாளர் போட்டியின்றி மேயராக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Newsletter

கோவையில் பகுதி நேர வேலை தேடி சென்ற கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட வழக்கு; தவெகவினர் 3 பேர் கைது

கோவை பேரூர் அருகே வேலை தேடி உணவகத்திற்குச் சென்ற கல்லூரி மாணவரை, பார்சல் கட்டித் தர மறுத்ததாகக் கூறி தாக்கிய வழக்கில், த...

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...