அரசு தேர்வுகளில் வெற்றி பெற மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் - கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அரசு போட்டித் தேர்வுகளில் பங்கேற்று வெற்றி பெற உதவும் வகையில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அறிவித்துள்ளார்.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அண்மையில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அரசு போட்டித் தேர்வுகளில் பங்கேற்பதை ஊக்குவிக்கும் பொருட்டு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மற்றும் ஏனைய அரசு தேர்வாணையங்களால் நடத்தப்படும் தேர்வுகளில் கலந்து கொண்டு வெற்றி அடைவதற்கு இந்த பயிற்சி வகுப்புகள் உதவும் என்று அவர் கூறினார்.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலமாக அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்களைக் கொண்டு போட்டித்தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். முதற்கட்டமாக 100 மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு மற்றும் தங்கும் விடுதி வசதியுடன் கூடிய இந்த சிறப்பு பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் 1, 2024 அன்று காலை 10.00 மணியளவில் சென்னையில் உள்ள சி.எஸ்.ஜ காது கேளாதோருக்கான மேல்நிலைப்பள்ளியில் தொடங்கவுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தை சார்ந்த விரும்பமுள்ள மாற்றுதிறனாளிகள் ஜூலை 29, 2024-க்குள் விண்ணப்பங்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு மாற்றுத்திறனாளிகள் அரசு வேலைகளில் அதிக எண்ணிக்கையில் சேர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...