மின் கட்டண உயர்வு, நியாயவிலை கடை பிரச்சனைகள்: தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்

கோவையில் தேமுதிக சார்பில் மின் கட்டண உயர்வு, நியாயவிலை கடை பிரச்சனைகள், காவிரி நீர் பிரச்சனை ஆகியவற்றை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கருப்பு ஆடை அணிந்த தொண்டர்கள் கோஷங்கள் எழுப்பினர்.


Coimbatore: கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின் கட்டண உயர்வை கண்டித்தும், நியாய விலைக்கடைகளில் பொருட்களை முறையாக வழங்கக் கோரியும், விவசாயிகள் பயன்பெறும் வகையில் காவிரி நீரை பெற்றுத் தரக்கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தேமுதிக முக்கிய நிர்வாகிகள் கருப்பு நிற ஆடை அணிந்தபடி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட தேமுதிக தொண்டர்கள், ஆளும் திமுக அரசை கண்டித்து பதாகைகளை ஏந்தியும் கோஷங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



தேமுதிகவை சேர்ந்த பெண்கள் மின் கட்டண உயர்வை கண்டிக்கும் வகையில், அம்மிக்கல்லில் அறைத்தும் உரல் இடித்தும் நூதன முறையில் தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.

தேமுதிக துணைச் செயலாளர் பார்த்தசாரதி கூறுகையில், "திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தொடர்ந்து மூன்று முறை மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. அதுமட்டுமின்றி கடந்த இரண்டு மாதங்களாக நியாயவிலைக் கடைகளில் பாமாயில் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுவதில்லை என்றும் மக்கள் கூறுகிறார்கள். ஏழை மக்கள் மீது சுமையை ஏற்றுகின்ற இந்த செயல்கள் மிகவும் கண்டிக்கத்தக்கது. திமுக அரசு மின் கட்டணத்தை திரும்பப் பெறுவதோடு நியாயவிலைக் கடைகளில் சரியான முறையில் பொருட்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்" என்றார்.



மேலும் அவர், "டெல்டா பகுதி விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே திமுக அரசு, கூட்டணியில் இருக்கும் கர்நாடகா காங்கிரஸ் அரசிடம் பேசி காவிரி நீரை பெற்று தர வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

சட்டம் ஒழுங்கு நிலை குறித்தும் பார்த்தசாரதி கருத்து தெரிவித்தார். "திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து 590 கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. சட்டம் ஒழுங்கு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. முதல்வர் தன் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை மூலம் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.



"போதைப் பொருட்கள் தமிழகம் முழுவதும் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது. கஞ்சா மற்றும் போதை பொருட்களால் கல்லூரி மாணவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இது குறித்து கேள்வி எழுப்பினால், 'போதைப் பொருள் விற்பனை நடைபெறுவதில்லை' என்று ஊடகங்களின் வாயிலாக திசை திருப்புகிறார்கள்" என்றும் பார்த்தசாரதி குற்றம்சாட்டினார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...