கோவையில் முக்கனி அறக்கட்டளை 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியது

கோவையில் முக்கனி மனிதநேய அறக்கட்டளை 12வது ஆண்டு நல்லிணக்க விழாவில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியது. சமூக ஆர்வலர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகளும் வழங்கப்பட்டன.


Coimbatore: கோவையில் முக்கனி மனிதநேய அறக்கட்டளை சார்பாக 12 ஆம் ஆண்டு நல்லிணக்க விழா சுகுணாபுரம் பகுதியில் உள்ள ரெயின்போ காலனியில் நடைபெற்றது. முக்கனி மனிதநேய அறக்கட்டளையின் நிறுவனர் O.இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அறக்கட்டளையின் நிர்வாகிகள் பலரும் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், பார்வையற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டோர், முதியோர் உள்ளிட்ட பல்வேறு குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.



15 நபர்களுக்கு தையல் மிஷின்கள், பார்வையற்றவர்களுக்கு நவீன கைக்குச்சிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்கள், அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, தன்னலம் பாராமல் பணியாற்றிவரும் சிறந்த சமூக ஆர்வலர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

விழாவின் ஒரு பகுதியாக, தமிழர் பாரம்பரிய பறை இசை, சிலம்பாட்டம், நடனம் உள்ளிட்ட பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்த நிகழ்வு மூலம் முக்கனி அறக்கட்டளை சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கும் உதவி செய்வதோடு, தமிழர் கலாச்சாரத்தையும் போற்றி வளர்க்கும் வகையில் அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...