கோவையில் நடைபெறவுள்ள போலோ மற்றும் குதிரையேற்ற போட்டிகள்: நடிகர் பிரசாந்த் பேட்டி

கோவையில் நவம்பரில் நடைபெறவுள்ள போலோ பிரிமியர் லீக் மற்றும் குதிரையேற்ற சாம்பியன்ஸ் லீக் போட்டிகளின் லோகோ வெளியீட்டு விழாவில் நடிகர் பிரசாந்த் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தார்.


கோவை: கோவை அவிநாசி ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் நவம்பர் மாதம் கோவையில் நடைபெற உள்ள போலோ பிரிமியர் லீக் மற்றும் குதிரையேற்ற சாம்பியன்ஸ் லீக் ஆகிய போட்டிகளுக்கான லோகோ வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களுள் ஒருவராக கலந்து கொண்ட நடிகர் பிரசாந்த் நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.

நடிகர் பிரசாந்த் கூறுகையில், "சிறுவயதிலிருந்தே குதிரையேற்றத்தில் மிகவும் ஆர்வம் உள்ளது. கிண்டியில் உள்ள கிளப்பில் தான் குதிரையேற்றம் கற்றுக்கொண்டேன். மேலும் என் திரைப்படங்கள் பலவற்றில் குதிரையேற்ற காட்சிகளில் நடித்திருக்கிறேன். குதிரை ஏற்றத்தின்போது குதிரைக்கும் அதில் பயணிப்பவருக்கும் ஏற்படும் நெருக்கம் மிகவும் அழகானது. அத்தகைய நிகழ்வு இங்கு நடைபெற இருப்பதை எண்ணி மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழர்களாக இணைந்து இத்தகைய நிகழ்வை கோவையில் நடத்த இருப்பதை ஊக்குவிப்பதற்காகவே நான் இங்கு வந்துள்ளேன்," என்றார்.

போலோ பிரீமியர் லீக்கில் செலிபிரிட்டிகளுக்கான போட்டி வைத்தால் அதில் பங்கு பெறுவீர்களா என்ற கேள்விக்கு, நான் அந்த அணியின் கேப்டனாக இருப்பேன் என்று பதிலளித்தார்.

அந்தகன் திரைப்படம் குறித்து, "அந்தகன் திரைப்படம் ஆகஸ்ட் 15ல் வெளியாகிறது. வரும் ஜூலை 24 அன்று அந்தகன் திரைப்படம் குறித்த சிறப்பு அறிவிப்பு வெளியிட உள்ளோம். சிம்ரன், கார்த்திக் சமுத்திரக்கனி உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளம் இந்தத் திரைப்படத்தில் நடித்துள்ளனர். எனக்காகவும் எனது தந்தைக்காகவும் இவர்கள் அனைவரும் இந்த திரைப்படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டனர், இந்த சமயத்தில் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மிகப்பெரிய பொருட்செலவில் இந்த திரைப்படத்தை உருவாக்கியுள்ளோம். நிச்சயமாக மக்கள் இந்த திரைப்படத்தை கொண்டாடுவார்கள், பாராட்டுவார்கள்," என்றார்.

GOAT பட நடனம் குறித்து, "நடன இயக்குனர் ராஜசுந்தரம், இயக்குனர் வெங்கட் பிரபு, சகோதரர் விஜய், பிரபுதேவா ஆகியோருக்கு இந்த செய்தியாளர் சந்திப்பின் வாயிலாக என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பிட்ட இந்த காட்சியில் மூவரும் சேர்ந்து நடனம் ஆட வேண்டும் என்று வெங்கட் பிரபு கூறினார். நாங்கள் மூவரும் மிகவும் மகிழ்ச்சியோடு அதில் பங்கேற்றோம். தற்போது அது சிறப்பாக வந்துள்ளது, அதில் மிகவும் மகிழ்ச்சி," என்றார்.

Multi star படங்கள் குறித்து, "திருடா திருடா, கண்ணெதிரே தோன்றினாய் ஆகிய Multi star படங்களில் நடித்திருக்கிறேன். தற்போதைய காலகட்டம் Multi star படங்களுக்கானது. அதன் அடிப்படையில் GOAT திரைப்படம் அமைந்துள்ளது. அதற்காக இயக்குனர் வெங்கட் பிரபுவிற்கும், தயாரிப்பு நிறுவனம் AGSக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார்.

தொடர்ந்து பேசிய பிரசாந்த், "நல்ல கதை இருந்தால் மட்டுமே நான் திரைப்படத்தில் நடித்திருக்கிறேன். அதன் அடிப்படையில் பார்ட் 2 எடுப்பது என்றால் என் அனைத்து திரைப்படங்களுக்கும் பார்ட் 2 எடுக்கலாம் என்பேன். என் அப்பாவை பொறுத்தவரை அனைவரையும் அன்பாக அணுகக் கூடியவர். அவருடைய இயக்கத்தில் பல படங்களில் நடித்திருக்கிறேன். தொடர்ந்து அவரிடமிருந்து கற்றுக் கொண்டே இருக்கிறேன். திரைப்படங்களைப் பொறுத்தவரை சின்ன படம், பெரிய படம் என்ற வேறுபாடு இல்லை, கதை சிறப்பாக இருக்கும் பட்சத்தில் நிச்சயமாக அந்த திரைப்படம் வெற்றிபெறும். அதற்கேற்றபடியான தளங்கள் தற்போது வந்து கொண்டிருக்கிறது," என்றார்.

2026 தேர்தல் குறித்து, "2026 தேர்தலில் மக்கள் பக்கம் நிற்பவர்களுக்கே எனது ஆதரவு" என்று அவர் கூறினார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...