உடுமலையில் ஆடி மாத முதல் வெள்ளி: அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

உடுமலையில் ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. மாரியம்மன், வன பத்ரகாளியம்மன், ஆண்டாள் நாச்சியார், தங்காத்தாள் கோவில்களில் பக்தர்கள் திரண்டனர்.


Coimbatore: உடுமலை: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு பல்வேறு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

உடுமலையின் புகழ்பெற்ற அருள்மிகு மாரியம்மன் கோவிலில் மாரியம்மனுக்கு பால், பன்னீர், மஞ்சள், தயிர் உட்பட 14 வகை அபிஷேகங்கள் மேற்கொள்ளப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.



நகராட்சிக்கு உட்பட்ட 3-வது வார்டு ஸ்டேட் பேங்க் காலனியில் உள்ள வன பத்ரகாளியம்மன் கோவிலில் அம்மனுக்கு 14 வகை சிறப்பு அபிஷேகம், சிறப்பு தீபாரதனை, கோமாதா பூஜை ஆகியவை நடைபெற்றன.

குறுஞ்சேரி ஆண்டாள் நாச்சியார் திருக்கோவில் மற்றும் ஏரி பாளையம் தங்காத்தாள் கோவிலிலும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன. சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...