கோயம்புத்தூர் கற்பகம் பல்கலையில் 'துளிர்-2024' வரவேற்பு விழா

கோயம்புத்தூர் கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கான 'துளிர்-2024' வரவேற்பு விழா ஜூலை 3 முதல் 9 வரை நடைபெற்றது. மாணவர்களின் வளர்ச்சி, தன்னம்பிக்கை மற்றும் ஒழுக்கம் குறித்து பல்வேறு தலைவர்கள் உரையாற்றினர்.


கோவை: கோயம்புத்தூர் கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் 'துளிர்–2024' விழா ஜூலை 3, 4, 5 மற்றும் 8, 9 ஆகிய ஐந்து நாட்கள் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலை, அறிவியல், வணிகவியல் மற்றும் மேலாண்மையியல் புல முதன்மையர் முனைவர் நா.வெ. பாலாஜி வரவேற்புரை வழங்கினார்.

கற்பகம் கல்விக்குழுமங்களின் தலைவர் Dr. இராச. வசந்தகுமார் தமது தலைமையுரையில், "நவீனத் தொழில்நுட்பம் மிக்க நாடுகளில் இந்தியா சிறந்து விளங்குகிறது. இந்தியாவின் வளர்ச்சி மாணவர்களின் அயராத உழைப்பில் இருக்கிறது. மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் விளங்க வேண்டும். திருக்குறளை வாழ்வியல் நூலாகக் கொள்ள வேண்டும்" என்று சிறப்புரை வழங்கினார்.



ஐந்தாம் நாள் (09.07.2024) நிகழ்வில் இன்போசிஸ் நிறுவனத்தின் AVP & HR லீடர், 'மாற்றம்' அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஜே. சுஜித் குமார் சிறப்புரை வழங்கினார்.



அவர், "மாணவர்கள் தங்களது குறிக்கோளைத் திட்டமிட்டு, காலத்தை முறையாகப் பயன்படுத்தி, தன்னம்பிக்கையோடு தொடர்ந்து முயன்றால் வெற்றி உறுதி" என்று அறிவுறுத்தினார்.

கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் முனைவர் கே.இராமசாமி, "மாணவர்கள் ஒழுக்கத்துடன் கூடிய கல்வியைப் பயின்று வெற்றி பெற வேண்டும்" என்று வலியுறுத்தினார். துணைவேந்தர் முனைவர் ப.வெங்கடாசலபதி, தாய்நாட்டின் பெருமை, மாணவர்களின் கடமை, மாணவர்களின் நலனுக்காக பெற்றோர்களின் உழைப்பு, வெற்றியின் மீதான மன ஒருமைப்பாட்டின் இன்றியமையாமை ஆகியவற்றை எடுத்துரைத்தார்.

விழாவின் நிறைவாக மாணவர் நலன் முதன்மையர் முனைவர் ப. தமிழரசி நன்றியுரை வழங்கினார்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...