கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக தனியார் துறையில் வேலைவாய்ப்பு முகாம்

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக தனியார் துறையில் வேலை வாய்ப்புக்கு வேலை அளிப்போர், வேலை தேடுவோர் சந்திப்பு நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 24ம் தேதியன்று காலை 10.39 மணியளவில் நடைபெறவுள்ளது.

இந்த தனியார் நிறுவன வேலைவாய்ப்பு நேர்காணல் நிகழ்ச்சியில் படிக்காதவர்கள் முதல் 10-ம் வகுப்பு, 12ம் வகுப்பு, அனைத்து பட்டதாரிகள், ஐடிஐ படிப்பு பயின்று சான்று பெற்றவர்கள் மற்றும் டிப்பளமோ கல்வித் தகுதி உடையவர்கள் உள்ளிட்ட அனைத்து கல்வித் தகுதி உடையவர்கள் இந்த நேர்காணல் நிகழ்ச்சியில் பங்கேற்கலாம்.

இந்நிகழ்ச்சியில், தனியார் துறையில் வேலையளிப்போர் கலந்துகொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். 

இதில் கலந்துகொள்ளும் மனுதாரர்கள் வேலையளிப்பவருக்கு எவ்வித கட்டணமும் அளிக்கத் தேவையில்லை. இந்நிகழ்ச்சி முற்றிலும் இலவசமாக நடத்தப்படவுள்ளது.

இந்நிகழ்ச்சி மூலம் வேலை பெறும் மனுதாரர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. தொடர்ந்து மனுதாரர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை அரசு வேலைவாய்ப்பு கிடைக்கும் வரை புதுப்பித்துக் கொள்ளலாம்.

21.04.2017 அன்று காலை 10.30 மணி முதல் 4 மணி வரை நடைபெறவுள்ள இத்தனியார் துறை வேலைவாய்ப்பு நிகழ்ச்சியில் பெருமளவில் மனுதாரர்கள் கலந்துகொண்டு வேலைவாய்ப்பு பெற்று பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...